பறை-3
முனைவர் மு.வளர்மதி பறை – கருப்பொருள் இசைக்கு இன்றியமையாத _ நெருங்கிய தொடர்பு உடைய பறையினைத் தொல்காப்பியர் கருப்பொருள்களுள் ஒன்றாகக் கொண்டமை பண்டைத் தமிழரின் இசையறிவுக்குச் சிறந்ததொரு சான்றாகும். தொல்காப்பியத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற முப்பிரிவில் கருப்பொருள்களுள் ஒன்றாகப் பறை குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. “தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப’’ (தொல்.பொரு.அகத்திணையியல்.18) என்ற தொல்காப்பியக் கருப்பொருள் நூற்பாவின் வைப்பு முறையில் ‘பறை’ வைக்கப்பட்டுள்ள பான்மை தோற்கருவிகளின் […]
மேலும்....