குறும்படம் – பிரதிபலிப்பு

 “வாழ்க்கை ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் இங்கே நடிகர்கள்’’ என்ற வில்லியம் ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளோடு தொடங்குகிறது இக்குறும்படம். திரைத்துறை என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை. எல்லோராலும் அந்தக் கனவை நினைவாக்கிட முடிவதில்லை. ஆகவே, மிகுந்த எச்சரிக்கையுடனேயே அதை அணுக வேண்டும் என்று எச்சரிக்கிறது இந்தக் குறும்படம். திரைத்துறையைப் பொறுத்தவரையில், வெற்றிபெற்ற சிலரே கண்ணுக்குத் தெரிகின்றனர். தோல்வியடைந்தவர்கள் மக்கள் பார்வைக்கே வருவதில்லை. அப்படி தோல்வியடைந்த ஒரு பெண்ணைப் பார்த்து, புதிதாக வர எண்ணும் ஒரு பெண் இதுபோன்று […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (14)

  -சிகரம்   பாடல் பாடினால் பாம்பு நஞ்சு அகலுமா? அப்பூதியடிகள் தம் திருமனைவியாரை நோக்கி, “திருநாவுக்கரசர் திருவமுது செய்ய இசைந்தது நாம் செய்த தவப்பயனேயாகும்; இது சிவபெருமான் திருவருளினால் வந்தது; இதன் மூலம் நாம் கடைத்தேறுவோம்’’ என்று தம்மில் கூறி மகிழ்ந்துகொண்டு திருவமுதினைச் சமைக்கத் தொடங்கினார். அறுசுவை பொருந்திய தூய நற்கறிகள், திருவமுது முதலியவற்றை ஆக்கினார்; ஆண்ட அரசுகள் திருவமுது செய்வதற்குரிய பரிகலத்துக்காக தமது மக்களுள்ளே மூத்த திருநாவுக்கரசினை நோக்கி, “வாழையின் நல்லதொரு குருத்தினை அரிந்து […]

மேலும்....

‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக் கோரி அனைத்துக் கட்சி மாணவர் அமைப்புகளின் கலந்துரையாடல்

      சென்னை பெரியார் திடலில்  ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் 10.02.2018 அன்று காலை 10.30 மணியளவில் தொடங்கி, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாணவர் அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டாம் (கல்வி) ஆண்டாக ‘நீட்’ தேர்வைத் திணிக்கும் மத்திய அரசுக்கு  வன்மையான கண்டனம். தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும்  தனியார் கல்லூரிகளில் அரசுக்குரிய இடங்களுக்கும்… தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி […]

மேலும்....

இந்தியா அளவில் தங்கம் வென்ற தாழ்த்தப்பட்ட பெண்!

 தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடந்த இந்தியப் பள்ளிகளுக்கு இடையேயான 63ஆவது தேசிய சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்று வந்திருக்கிறார் அரசுப் பள்ளி மாணவி ச.செந்தமிழ் யாழினி. இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்திலுள்ள செருவங்கி என்கிற சின்னஞ்சிறிய கிராமத்தைச் சார்ந்தவர். எளிமையான தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த செந்தமிழ் யாழினி கிராமத்தில் நடக்கும் கைப்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளை விரும்பிப் பார்ப்பாராம். விளையாட்டில் இவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த செந்தமிழ் யாழினியை இறகுப் பந்து […]

மேலும்....

கோயில்கள் நிர்வாகத்தைக் கைப்பற்றி கொள்ளையடிக்க ஆரிய பார்ப்பனர்கள் சூழ்ச்சி! எச்சரிக்கை! எச்சரிக்கை!

   -மஞ்சை வசந்தன்   திராவிடர்_ஆரியர் போர் திரைவிலகி வெளிப்படத் தொடங்கிவிட்டது. அணையப்போகும் நெருப்பும், நிற்கப்போகும் எஞ்சின் ஓசையும் ஓங்கி எழுந்தே ஒடுங்கும்! ஆரிய பார்ப்பன ஆட்டமும் இப்பொழுது அந்த நிலையில்தான் ஆர்ப்பரித்து எழுகிறது! ஆட்சி, அதிகாரம் இருப்பதால் எதையும் செய்யலாம் என்ற இறுமாப்பில் எகிறிக் குதிக்கிறார்கள்! உலகம் ஒத்துக்கொண்ட டார்வின் அறிவியல் கருத்தையே அகற்றிவிட்டு, கடவுள் உலகைப் படைத்தார் என்றக் கட்டுக்கதையை புகுத்த முயல்கின்றனர். பசுமாட்டு மூத்திரத்தை ஊட்டச்சத்து தரும் பானம் என்று பருகச் சொல்கிறார்கள்! […]

மேலும்....