உங்களுக்குத் தெரியுமா ?

நீதிக்கட்சி தலைவரான டாக்டர் நாயர் உடல் நலம் இன்றி லண்டனுக்கு சிகிச்சைக்கு சென்ற போது அவர் மரணம் அடைய வேண்டும் என்று பார்ப்பனர்கள், ஆயிரக்கணக்கான தேங்காய் உடைத்து விசேஷ அர்ச்சனை செய்தார்கள் என்ற செய்தியும், அதற்கு பதிலளித்த நாயர் நன்றாக உடையுங்கள். எங்கள் பகுதியில் தேங்காய் விற்கட்டும் என்றார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

கல்வித் துறையில் காவிகளின் பயங்கரவாதத்தை விளக்கும் நூல்கள்

  மக்களுக்குத் தீமை விளைவிக்கும் எந்தக் கருத்தையும் துணிவுடன் எதிர்த்துப் பிரச்சாரம் செய்து முறியடிக்கும் இயக்கம் திராவிடர் கழகம். எந்தப் பிரச்சினையினாலும் அதன் வேர்வரைச் சென்று ஆராய்ச்சி செய்து அனைத்து உண்மைகளையும் எளிய நடையில் எல்லா மக்களுக்கும் செல்லும் வகையில் மலிவு புத்தகங்களாக்கிக் கொண்டு போய்ச் சேர்ப்பது திராவிடர் கழகத்தின் மகத்தான மற்றும் தனித்துவம் வாய்ந்த பணியாகும். அந்த வகையில் 2014ஆம் ஆண்டு முதல் மத்திய (ஆர்.எஸ்.எஸ்.) அரசின் இந்துத்துவ கல்வித் திணிப்பை தோலுரிக்கும் வகையில் திராவிடர் […]

மேலும்....

பாரதப் பாத்திரங்கள் (6)

      சு.அறிவுக்கரசு குந்தி   திருமணத்துக்கு முன்பே சூரியனுடன் கலவி செய்து கர்ணனைப் பெற்றவள் குந்தி. அது கள்ளப் பிள்ளையாம். எனவே, கங்கை ஆற்றோடு போக விட்டுவிட்டாள். கணவனுக்குப் பெறாமல் வேறு ஆள்களுக்குப் பெற்றவை நல்ல பிள்ளைகளா? தன் மகன்கள் என்றால் குந்தி. வியாசனின் கர்ப்பதானத்தால் பிறந்த திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் என்போரில் பாண்டு ஒரு சாபத்தைச் சுமந்தான். உடலுறவில் ஈடுபட்டிருந்த மான்களை வேட்டையாடிக் கொன்றான். உடல் உறவில் ஈடுபட்டால் பாண்டு இறந்துபோவான் என்பது […]

மேலும்....