ஆசிரியர் பதில்கள்

வீதிக்கு வீதி,  வீட்டிற்கு வீடு  பிரச்சாரங்கள்  வேண்டும்!”   கே:                 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதத்தில் மட்டுமே எழுத வேண்டுமெனக் கூறிவிட்டு பிறகு உடனே திரும்பப் பெற்றிருக்கிறாரே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இது எதனைக் காட்டுகிறது? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப:                     முன்யோசனையற்ற சமஸ்கிருத வெறியர்களின் ஆட்சியாக மத்திய பா.ஜ.க. ஆட்சி உள்ளது என்பதையும், எதிர்ப்புப் புயல் கிளப்பியதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆட்சி இது என்பதையும் காட்டுகிறது. […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (23)

இறந்தவர் உடலில் வேறு ஒருவர்  உயிர் புகுந்து உயிர் வாழ முடியுமா? சிகரம்     ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்களை எழுதினார் என்கிறது இந்து மதம்! திருக்கயிலைமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயிலுக்கு முதற்பெருங் காவலராக விளங்கி, இந்திரன், திருமால், பிரமன் முதலாகிய தேவர்களுக்குச் சிவநெறியினை அருளிச் செய்யும் பணிபூண்ட திருநந்திதேவரின் திருவருள் உபதேசத்தினைப் பெற்ற நான்மறைச் சிவயோகியர் ஒருவர் இருந்தார். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளையும் கைவரப் […]

மேலும்....

‘தலித்துகள் சூத்திரர்கள் அல்லர் என்பதால் அவர்களுக்கு இழிவு இல்லை என்பதா ?

    தவறான புரிதலில் உள்ள தலித் இளைஞர்கள் சிந்தனைக்கு……. தலித் இளைஞர்களைக் குழப்பும் முகநூல் பதிவு: இதில் இக்கால இளைஞர்கள் சிலருக்கு அய்யங்களும், குழப்பங்களும் கேள்விகளும் எழுகின்றன. எனவே சில விளக்கங்கள். தலித் சூத்திரர்கள் அல்ல. அதனால், அவர்களுக்குச் சூத்திரர்களுக்கு உள்ள இழிவு இல்லை என்று பொருள் கொண்டு பெருமை கொள்வது அறியாமை! ஆரிய பார்ப்பனர்கள் வர்ணம் பிரிக்கும்போது தங்களை உள்ளடக்கிய பிரிவில் தாழ்த்தப்பட்டவர்கள் வருவது தங்களுக்கு இழிவு, கேவலம் என்று எண்ணி அவர்களை அவ்வர்ணப் […]

மேலும்....

(இயக்க வரலாறான தன்வரலாறு – 205)

  ‘கற்பு’ என்பது  பெண்ணுக்கு மட்டுமா? கி.வீரமணி        18.05.1983 அன்று வெளியான ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையின் சார்பில் ‘ஞாநி’ அவர்கள் என்னை பேட்டி கண்டார். அந்த பேட்டி, அந்த இதழில் “ரத்தக் கையெழுத்து வாங்கினார் வீரமணி’’ என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது. பெரியார் திடலில் உள்ள திராவிடர் கழகத் தலைமை அலுவலகத்திற்கு தினசரி தபாலில் ரத்தக் கையெழுத்திட்ட கடிதங்கள் நூற்றுக்கணக்கில் வந்தபடி இருக்கின்றன என்பதனை அந்தப் பேட்டியில் விளக்கியிருந்தேன். மாநில உரிமைகளுக்காகவே சீக்கியர்கள் போராடுகிறார்கள். […]

மேலும்....

விருதுநகர் குறள் மாநாட்டுத் தீர்மானங்கள்

  நேயன்       எல்லாத் துறைகளைப் பற்றியும் நல்வழி காட்டக்கூடிய – அறிவு வழியைக் காட்டக்கூடிய நீதி நூல் நம் மக்களுக்கு இன்று குறள் ஒன்றைத் தவிர வேறில்லை.   1. இப்பொழுதுள்ள கல்வித் திட்டத்தில் முதல் உயர்நிலை வகுப்பு (பாரம்) தொடங்கி இளங்கலைஞர் (ஙி.கி.,)  வகுப்பு முடிய திருக்குறள் முழுதும் படித்து முடிக்கும் வகையில் படிப்படியாகப் பாடத் திட்டம் வகுக்குமாறும், அதற்கென தனி வினாத்தாள் (ஷேக்ஸ்பியர் போல) ஏற்படுத்துமாறும் கல்வித்துறை அதிகாரிகளையும் பல்கலைக் […]

மேலும்....