நெருங்கிய உறவில் திருமணம் கூடாது! ஏன்?

இன்று உலக மக்கள் தொகையான 760 கோடியில் 10 முதல் 12 சதவிகிதம் வரை நெருங்கிய ரத்த சம்பந்த உறவில்தான் திருமணம் (Consanguineous marriages) செய்து கொள்கிறார்களாம்! காரணம் இதில் குடும்பப் பின்னணியை ஆராயத் தேவையில்லை; தலைமுறை உறவுகள் நீடிக்கும்; குடும்பச் சொத்துக்கள் மற்றவர் கைகளுக்குப் போகாது என்று பல காரணங்கள். வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் பலவற்றில் இப்பழக்கம் கலாசார ரீதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. சில அய்ரோப்பிய […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…

(இயக்க வரலாறான தன்வரலாறு – 209) அண்ணா பெயரிலான அரசு சங்கராச்சாரிக்கு வரவேற்பளிக்கலாமா? மதுரையில் 17, 18.12.1983 ஆகிய இரு நாட்களும் திராவிடர் கழக மாநில மாநாடும், ஈழ விடுதலை மாநாடும் மிகச் சிறப்பான முறையில், மதுரை மாநகரத்து மக்களுக்கு மட்டுமல்ல; மாநாட்டில் பங்கேற்ற லட்சோபலட்சம் தமிழர்களுக்கும் என்றென்றும் உள்ளத்தில் பதிந்துவிட்ட காட்சியாக மதுரை மாநாடுகள் அமைந்திருந்தது.ஈழ விடுதலை மாநாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.மாநாட்டில் நான் நீண்ட உரையாற்றினேன். திராவிடர் கழகத்துக்காரர்கள் யாராக […]

மேலும்....

வாசகர் கடிதம்

பெரியார் கொள்கைக்கு வெற்றி! உண்மை (ஆகஸ்ட் 16_31, 2018) இதழின் அட்டைப் படத்தில் பெரியார் _கலைஞர் ஒளிப்படம் தத்ரூபமாக அமைந்திருந்தது. பல்வேறு  கருத்துகள் சுவைபடவும், ரத்தினச் சுருக்கமாகவும் இருந்தன. குறிப்பாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் முதல் வெற்றி எனும் தலைப்பில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய _ அரிய செய்தியாக அமைந்தன. மேலும், ஜாதி ஒழிப்புக் கொள்கையை தனது உயிர் மூச்சுக் கொள்கையாக அறிவித்து அதற்காக வாழ்நாள் முழுவதும் தன்னையே அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். […]

மேலும்....

பாரதப் பாத்திரங்கள் ( 9 )

கர்ணன் திரவுபதையின் சுயம்வரம். தற்போதைய பெண் பார்க்கும் படலம். பல இளைஞர்கள் வருவர். திறமையைக் காண்பிப்பர். விரும்பியவனுக்குப் பெண் மாலை இடுவாள். பார்ப்பனன் வேடத்தில் அர்ச்சுனன் அமர்ந்திருந்தான். அவனுக்கிணையான வீரனான கர்ணனும் அங்கே. அக்கால வழக்கப்படி வில்லில் நாணேற்றுவது போட்டி. கர்ணன் எழுந்தான். வில்லில் நாணேற்றி விட்டான். போட்டியில் வென்றுவிட்டான். மணக்க வேண்டிய திரவுபதை மறுத்து விட்டாள். “தேரோட்டியின் மகனை மணக்க மாட்டேன்’’ எனக் கூறிவிட்டாள். கலந்து கொண்டோர் யாவராயினும் ஒன்றே.  யார் திறமையானவன் என்பதற்குத்தான் போட்டி. […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (20)

திருவள்ளுவரின் குறள் என்றைக்கும்                                             பயன்படும் ஒப்பற்ற நூல் – தந்தை பெரியார் வள்ளுவர் எந்த மதத்தினை சார்ந்தவர் என்று தன்னை காட்டிக் கொள்ளவில்லை. இன்ன மதத்துக்கு என்று இலக்கியம் செய்யவில்லை. அறிவு சம்பந்தமானவற்றையே குறளில் காட்டியுள்ளார். எனவே, உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையானவற்றிற்கு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி இருக்கின்றேன். நான் வள்ளுவர் குறள் முக்காலத்துக்கும் பயன்படக்கூடியது என்று கூறினால் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டேன். அந்தக் காலத்தில் ஏது ரயில், எலக்ட்டிரிக் விளக்கு மற்ற சாதனங்கள் […]

மேலும்....