தாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை

    ஜூலை 16_-31 (2018) உண்மை இதழில், உங்களுக்குத் தெரியுமா பகுதியில், “தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதன்முதலில் அமைச்சராக்கியதும்; தாழ்த்தப்பட்டோர் பொதுவீதிகளில் செல்ல, தனியாக ஆணைப் பிறப்பித்ததும் திராவிடக் கட்சியான  நீதிக்கட்சிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?’’ என்ற செய்தி வெளியிடப்பட்டதைப் படித்த வாசகர்கள் சிலர், முதன்முதலில் எந்த தாழ்த்தப்பட்டவரை நீதிக்கட்சி ஆட்சி அமைச்சராக்கியது? என்றும்; தாழ்த்தப்பட்டோர் பொதுவீதிகளில் செல்ல பிறப்பிக்கப்பட்ட ஆணை விவரமும் தெரிவியுங்கள் என்று கேட்டிருந்தார்கள். எனவே, கீழ்க்கண்டவற்றை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.   […]

மேலும்....

புத்தி வந்தால் பக்தி போகும்!

   ஆறு.கலைச்செல்வன் “மாரியாத்தாளுக்கு வேண்டி தீ மிதித்து வழிபாடு செய். உன் கஷ்டங்கள் எல்லாம் அந்தத் தீயிலே கருகி காணாமல் போயிடும்’’ என்று உபதேசம் செய்தார் சோதிடர். கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்தன். வீடுகட்ட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் கட்டி முடித்த பாடில்லை. பண நெருக்கடி அவனை வாட்டி வதைத்தது. ஏதோ ஒரு தைரியத்தில் கையில் இருந்த பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டும் பணியைத் தொடங்கினான். விவசாய வருமானத்தில் […]

மேலும்....

(இயக்க வரலாறான தன்வரலாறு – 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை!

கி.வீரமணி மதியழகன் உடலுக்கு ஆசிரியர் மலர்வளையம் வைத்தபோது.   தென்னார்க்காடு மாவட்ட தி.க. செயலாளர் துரை.சந்திரசேகரன், வடலூர் கே.வி.நாராயண சாமி_லீலாவதி ஆகியோர் மகள் கலைச்செல்வி ஆகியோர் மணவிழா 07.08.1983 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் குறிஞ்சிப்பாடி பார்வதி அம்மாள் திருமண மண்டபத்தில் என்னுடைய தலைமையில், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் என் இராசாங்கம் முன்னிலையில் நடைபெற்றது. மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டு மாலை அணிவித்த பின் நான் திருமணத்தின் சிறப்புக் குறித்து இரண்டு மணிநேரம் உரையாற்றினேன். “சந்திரசேகர் […]

மேலும்....

வாசகர் மடல்!

  விழிப்புணர்வு விடிவெள்ளி  உண்மை     சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் உயர்திரு. உண்மை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் இதழில் வெளிவந்த, “ஏரி காத்தான்’’ என்ற சிறுகதை ஆசிரியர் திரு.ஆறு.கலைச் செல்வன் அய்யா அவர்கள் நமக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை நீக்க நாமே களத்தில் இறங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இறைவனால் ஆபத்து விலகிவிடும் என்று முயற்சியே இல்லாமல் முட்டாள்தனமாகச் செய்யும் செயல்பாடுகள் பேராபத்தை ஏற்படுத்துவது உறுதி என தெளிவுபடுத்தியுள்ளார். அடுத்து ‘குலமா? குணமா?’ என்ற […]

மேலும்....

பிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா?

“காசியபரின் மனைவியருள் கசை என்பவள் ஒருத்தி, அவள் கோபம், அசிங்கமான சொற்கள், பொறாமை, துவேஷம், அசுத்தி போன்ற சர்வ தீயகுணங்களும் நிரம்பியவள். அதனால் காசியபர் அவள் எப்போது எதை வேண்டினும் அதனை அருள்வார். தனக்குக் குழந்தை இல்லாததால் மற்றவர்கள் ஏச்சுக்கும், பேச்சுக்கும் காரணமாகி இருப்பதை எடுத்துக் கூறி தனக்குப் புத்திர பாக்கியம் அருள வேண்டினாள். அதன்படி அவள் கருவுற்றாள். முழு மாதங்கள் நிறைந்ததும் ஒருநாள் அந்தி வேளையில் ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். அந்தப் பாலன் நான்கு கரங்கள், […]

மேலும்....