அப்பா ! -திரைப்பார்வை

பிள்ளைகளை எப்படி உருவாக்க வேண்டும் என்ற சரியான புரிதல் இன்றி, மந்தைக் கூட்டமாய் மழலைகளை வதைத்தெடுக்கும் கொடுமைகளுக்குத் தீர்வுகாண இத்திரைப்படம் முயன்றிருப்பதை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும். சமுதாயத்தில் உள்ள பெற்றோரின் மனநிலையை மூன்றாகப் பிரித்து, மூன்று பெற்றோர்களை எடுத்துக்காட்டுகளாக்கி விளக்கியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. கல்வி முறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகள் கூறுகையில் காட்சிக்குக் காட்சி கைத்தட்டல் பெறுகிறார்.பள்ளியில் ஆசிரியர் தரும் புராஜெக்டை தானே தன் முயற்சியில் செய்து எடுத்துச் செல்லும் சமுத்திரக்கனியின் மகனுக்குக் கிடைத்தது தலைவீங்க […]

மேலும்....

திரைப்பார்வை : காக்கா முட்டை

பாத்திரத் தேர்விலேயே இயக்குநர் வெற்றிபெற்று விடுகிறார். அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக் களத்திற்கு அவ்வளவு பொருந்திப் போகிறது. காக்கா முட்டை -_ ஒரு திரைப்படமாக இல்லாமல் நம் கண் முன்னால் ஒரு வாழ்க்கையாகவே விரிகிறது. காக்காமுட்டை தமிழ்த் திரைப்படத்திற்கு அரிதான டைனோசர் முட்டை. இந்த அளவுக்கு தாராள மயத்தின் தாக்கத்தை _ ஏழை, பணக்காரன் என்ற இரு பிரிவினரிடையே ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை மிக வலிமையாக சமரசத்திற்கு இடமின்றி வேறு எந்த படமும் பதிவு செய்ததில்லை. காட்சிகளுக்குள் கலை […]

மேலும்....

திரைப்பார்வை : புறம்போக்கு

இயல்பாகவே தான் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று சொல்லாமல் தன் படங்களின் வாயிலாக அதனை வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். இவரின் படங்கள் அனைத்தும் அனைவராலும் அந்தந்த காலகட்டத்தில் பேசப்படுபவையாகவே அமையும், அதற்கு இந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் விதிவிலக்கல்ல. இந்த திரைப்படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்காக மூன்று மரண தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய குற்றவாளி ஆர்யா. இந்த மரண […]

மேலும்....

திரைப்பார்வை – உன் சமையலறையில்

  எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய தெலுங்கு நாவலை மய்யப்படுத்தி மலையாளத்தில், ஆஷிக் அபு இயக்கத்தில் 2011இ-ல்  வெற்றிப் படமாய் வெளிவந்த சால்ட் அண்ட் பெப்பர் திரைப்படத்தின் மறுஆக்கமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் உன் சமையலறையில். உன் சமையலறையில் திரைப்படத்தில்  தமிழர்களின் உணவுச் சுவையுணர்வை மய்யப்படுத்தி அதன் ஊடே காதல் அரும்பச் செய்து சமூகப் பிரச்சினைகளை அலச முற்பட்டிருக்கிறார் திரைப்படத்தின் நாயகனும் இயக்குனருமான பிரகாஷ்ராஜ். இந்தப் பொறப்புதான் ருசிச்சுச் சாப்பிடக் கிடைச்சது என்கிற தலைப்புப் பாடலுடன் தொடங்குகிறது திரைப்படம். […]

மேலும்....

திரைப்பார்வை : சைவம்

கி.தளபதிராஜ் இயக்குனர் விஜய்யின் சைவம் திரைப்படம் பார்த்தேன். படத்தின் மூலக்கதை அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியிருப்பதைத் தவிர்த்து அனைத்தையும் ரசிக்கலாம். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். தன் சேவல் பலி கொடுக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் தமிழ் தன் அம்மாவிடம் வைக்கும் கேள்விகள் பகுத்தறிவுச் சாட்டை. சாமிக்கு ஏம்மா நம்ம சேவலைப் பலி கொடுக்கணும்?சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறாருல்ல?சாமி அப்படிக் கேட்டுச்சாம்மா?சாமி கேட்காது. சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறதால […]

மேலும்....