பெருந்தலைவர் காமராசர்!

கல்விக்கண் திறந்தவரே காமராசர்! கற்காத மேதையிவர்; கரும வீரர்; எல்லார்க்கும் இலவசமாய்க் கல்வி தந்தார்! இந்நாட்டின் மேன்மைக்கே உழைத்து வந்தார்! பண்பாளர் மூன்றுமுறை முதல்வர் ஆனார்! பகலுணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்! ஒன்பதாண்டுச் சிறையினிலே கழித்தார்! நாட்டின் ஒப்பற்ற விடுதலைக்கே பாடு பட்டார்! அணைக்கட்டுப் பற்பலவும் அமைக்க லானார் அனைவரது பாராட்டும் புகழும் பெற்றார் இணக்கமுற வேளாண்மைத் தொழிலுக் காக ஏற்புடைய நீர்வளத்தைப் பெருக்க லானார்! எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக் காட்டாய் என்றென்றும் திகழ்ந்தவரே காம ராசர்! […]

மேலும்....

பானகல் அரசர்

பன்னரும் புகழ்மிகு பானகல் அரசர் முன்னர் திராவிடர் கழகம் சேர்ந்து பின்னர் நீதிக் கட்சியில் இணைந்தார்! சென்னை மாநில இரண்டாம் முதல்வராய் ஆட்சியும் புரிந்தார்! நீதிக் கட்சிஉள் ளாட்சித் துறையில் அமைச்சரும் இவரே! பறையர் தலித்தென அழைத்தல் வேண்டா! நிறைவாய் ஆதி திராவிடர் என்னும் பெயரினைச் சட்டம் ஆக்கினார்! மகளிர் நயத்தகு வாக்கு உரிமை வழங்கினார்! இன்புற இந்திய மருத்துவக் கல்லூரி சென்னை நகரில் தொடங்கினார்; மருத்துவக் கல்வித் தகுதியில் சமற்கிரு தத்தை வல்லவர் நீக்கியே சட்டம் […]

மேலும்....

பகைவர் பகல்வந்த நிலவானார் கலைஞர் முன்னே!

– பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் உலகின்வா யிசைக்குமுன் சீரை யென்றும்! உலவுங்கால் வியக்குமுன் உழைப்பின் வன்னம்! செலவென்றால் சிறகிருந்தும் பறவை அஞ்சும்! சோர்வின்றிச் செல்லுமுன் காலும் நெஞ்சும்! இலவுமுன் மென்நெஞ்சை வியந்து விம்மும்! இரவுமுன் விழிகண்டு பகலென் றெண்ணும்! பலருமுன் வரலாற்றில் பகையாய் வந்தும் பகல்வந்த நிலவானார் உன்றன் முன்னே! முன்னேராய் நீசென்றாய் கல்லின் முள்ளின் முனையுணராத் தாள்கொண்டோம் பின்னே வந்தே! மின்னேராய் மதியுற்றே வெல்லுஞ் சொல்லை விண்ணேராய்ப் பொழிந்தாய்நீ! வியர்வை […]

மேலும்....

கலைஞரின் சட்டங்கள்…- பேரா.முனைவர் நா.சுலோசனா

திிருக்குவளையில் அரும்பி திருவாரூரில் மலர்ந்து குவலயம் முழுதும் மணக்கும் முத்தமிழறிஞரே! திக்கற்றவர்களுக்கு திக்கெல்லாம் கிழக்காக்கிய திராவிடச் சூரியரே! மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு மனிதனின் மானம் காக்க கைரிக் ஷா ஒழித்து தந்தையின் (பெரியார் ) சொல் காத்த தனையரே! தொழு நோயாளர் மாற்றுத் திறனாளர் பிச்சைக்காரர் இவர்தம் துயர்நீங்க மறுவாழ்வுத் திட்டம் தந்த மானுட மீட்பரே! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என உலக நாடுகள் திரும்பிப் பார்க்க சிப்காட், சிட்கோ, டைடல் பூங்காக்களால் […]

மேலும்....

சாதனை நாயகர்!-கவிதை

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நா டென்றும் அமிழா நெடும்புகழ் அடைந்திட வாழ்வில் பெரியார் அண்ணா பீடுசால் நெறியில் சரியாய் அய்ந்து முறையாய் ஆண்டவர் தரணி புகழும் தமிழினத் தலைவர்! பரணி இலக்கணப் பாட்டுடைக் குரிசில்! அஞ்சுகம் முத்து வேலரின் செல்வன் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உயரிய குணமும் ஒருங்கே சான்ற அயரா உழைப்பினர்; ஆளுமை மிக்கவர்; குறளோ வியமும் வள்ளுவர் கோட்டமும் குறளார் தமக்கே குமரியில் சிலையும் படைத்த முதல்வர்; பகைவர் விளைத்த தடைகள் யாவையும் தகர்த்த […]

மேலும்....