மூடச் செயல்களை முற்றாக ஒழிப்போம்!

கண்ணிருந்தும் பார்வையிலார் போல வாழ்வார் கற்கால மாந்தரென அலைவார்! பொய்யை உண்மையென நம்பிடுவார்! தலையில் தேங்காய் உடைத்திடுவார்! செய்நேர்த்திக் கடனே என்பார்! எண்ணத்தில் பிறழ்ந்தாராய் இராகு காலம், எமகண்டம், விதியென்றே இயம்பிப் பாவ, புண்ணியத்தை இனம்கண்டு தெளிந்தார் போலும் பூசைகளால் பரிகாரப் புளுகை ஏற்பார்! மந்திரத்தை, சோதிடத்தை முழுதும் நம்பி மனம்போன போக்கினிலே உழல்வார்! ஏய்ப்போர் தந்திரத்தை உணராமல் கழுத்தில், கையில் தாயத்து, கயிறுபல கட்டிக் கொள்வார்! சிந்திக்க மறுப்போராய்ப் பேய்கள் ஓட்டிச் சிறுபிள்ளைத் தனமாக நடந்து […]

மேலும்....

புலவர் குழந்தை!- புலவர் கடவூர் மணிமாறன்

எழுச்சிமிகு தமிழ்ப்புலவர்! அறிஞர் போற்றும் இராவணநற் காவியத்தைப் படைத்த ஏந்தல்! பழுதறியாப் பாடல்களால் தமிழர் மேன்மை பழஞ்சிறப்பை, வரலாற்றை விளங்கச் சொன்னார்! குழந்தையிவர் பெயரில்தான்! சீர்தி ருத்தக் கொள்கையுரம் வாய்ந்தஇவர் புலமை ஆழி! முழுதுணர்ந்த தமிழாசான்! தமிழி னத்தின் முடம்நீக்கப் பழிநீக்க முனைந்து நின்றார்! இலங்கையர்கோன் இராவணனைத் தலைவ னாக, ஏற்றமுடன் விளக்குகிற காவி யத்தை உலகெங்கும் வாழ்தமிழர் உவகை எய்த ஒப்பரிய தமிழ்க்கொடையாய் வழங்க லானார்! சிலரிதனைத் தடைசெய்தார்! பின்னர் வந்தோர் சிறுமதியோர் தடைநீக்கி மாண்பைச் […]

மேலும்....

ஏழைப் பங்காளர் காமராசர் !

குலத்தொழில் செய்யச் சொன்ன கொடியரின் இழிவைச் சாடி நலம்தரும் திட்டம் நல்கி நற்றமிழ் இனத்தைக் காத்தார்! இலக்குடன் ஆட்சித் தேரை இயக்கினார் காம ராசர்! பலதொழிற் சாலை கண்டார் பள்ளிகள் திறந்தார் மீண்டும்! பள்ளியில் படிப்போர்க் கெல்லாம் பசித்துயர் பறந்தே ஓட நல்லவர் போற்றும் வண்ணம் நண்பகல் உணவுத் திட்டம் பல்வள அணைக்கட் டுக்கள் பாங்குறக் கொணர்ந்தார்! இல்லார் இல்லமோ இன்பம் எய்த ஏழைப்பங் காளர் ஆனார்! விடுதலைப் போரில் அந்நாள் வெஞ்சிறை ஒன்ப தாண்டாய்ப் படுதுயர் […]

மேலும்....

மூத்திரப்பை கைசுமந்து மூடத்தைக் களைந்தாய் வாழி !தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்து!

– பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் காப்பில்லாக் கனிமரமாய்க் காய்த்த தெல்லாம் கயவர்கை பறித்தெடுத்தும் மகிழ்ந்தி ருந்தோம்! தோப்பென்று கூடாமல் தனித்தி ருந்து துயர்ச்சாதி மயக்கத்தில் அமிழ்ந்தி ருந்தோம்! கூப்புதற்கே கைகளுற்றோம்! பணிந்து நிற்கக் கூன்முதுகில் குலப்பெருமை ஏற்றி வைத்தோம்! பூப்பறியா மலர்ச்செடியாய்க் கல்வி யற்றும் புத்தனெங்கள் பாட்டனென்று பெருமை கொண்டோம்! இருள்செரிக்கும் கதிரொளியாய் நின்கண் பட்டே இழிவிருளை ஓட்டியெம்மின் விடியல் கண்டோம்! மருளூட்டும் மதஞ்சாதி சாத்தி ரங்கள் மறுதலித்து மனிதந்தான் முதன்மை யென்னும் தெருளூட்டத் தெருவெல்லாம் வடம்பி […]

மேலும்....

அண்ணாவின் புகழ்பாடுவோம்!-முனைவர் கடவூர் மணிமாறன்

வான்மழைபோல் பொழிந்திட்ட கருத்துக் கொண்டல்! வற்றாத தமிழருவி! கொள்கைக் கோட்டம்! தேன்போல நாவினிக்கப் பேச வல்லார் திராவிடநா டிதழ்காஞ்சி ஏடு தந்தார் கான்மலராய் மணக்கின்ற சொற்க ளாலே கண்ணியத்தை, கடமையினை, கட்டுப் பாட்டைப் பான்மையுற வலியுறுத்தி உலகில் வாழும் பைந்தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்தார் அண்ணா! ஆங்கிலத்தில் அருந்தமிழில் உரைகள் ஆற்றும் அருந்திறலைக் கொண்டிருந்த அறிவுச் சொற்கோ! தீங்கெவர்க்கும் எண்ணாத காஞ்சித் தென்றல்! திராவிடத்துப் புகழ் நிலவாய்த் திகழ்ந்த செம்மல்! பாங்குறவே இரண்டுமொழிக் கொள்கை ஏற்போம்! பகைப்புலத்தோர் இந்தியினை […]

மேலும்....