உலகக் கோப்பை கேரம் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்ற தங்க மங்கை காசிமா!

அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கேரம் வாகையர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனைச் சிகரத்தை எட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த இளம் வீராங்கனை காசிமா. சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மெகபூப் பாஷா. ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் காசிமா (வயது 17). இவர் அண்மையில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த 6வது உலகக் கோப்பை கேரம் வாகையர் போட்டியில் கலந்து கொண்டு மகளிர் தனிப்பிரிவு, மகளிர் இரட்டையர் பிரிவு, குழுப் போட்டி என மூன்று பிரிவுகளிலும் […]

மேலும்....

ஆணையரான தூய்மைப் பணியாளரின் மகள் !

மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்தவரின் மகள் அந்த நகராட்சிக்கே ஆணையாளராகி நெகிழ வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சேகர். மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது இணையர் செல்வி. இவர்களது மகள் துர்கா, வயது 30. இளங்கலைப் பட்டதாரியான துர்கா பலமுறை TNPSC தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் விடாமுயற்சி மேற்கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதி வெற்றி பெற்று தந்தை பணியாற்றிய […]

மேலும்....

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சாதித்த மாணவி

மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சாதித்த மாணவி மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்த மாணவியின் வீட்டிற்கு உடனடியாக இலவச மின்இணைப்பு வழங்கி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள புத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலா. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருடைய இணையர் சுதா. இவர்களின் […]

மேலும்....

அய்.ஏ.எஸ். தேர்வில் சாதனை புரிந்த அக்காள் – தங்கை

நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாக அய்.ஏ.எஸ். கருதப்படுகிறது. இதற்காக ஒன்றிய அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி. எனும் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெறுவது சவால் நிறைந்தாகும். ஆனால் எந்த ஒரு தேர்விலும் ஆர்வமும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றிக்கனியை எளிதில் எட்டிப் பிடித்துவிடலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள அக்காள்- தங்கை சகோதரிகள். இதன்மூலம் ஒரே குடும்பத்தில் இரண்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த […]

மேலும்....

வில் வித்தையில் சாதனை புரிந்துவரும் விளையாட்டு வீராங்கனை சஞ்சனா!

சென்னையைச் சேர்ந்த ஆறு வயதான மாணவி சஞ்சனா வில் அம்பு எய்தல் விளையாட்டில் சர்வதேச அளவில் பல சாதனைகள் புரிந்து வருகிறார். பி.சஞ்சனா தன் மூன்று வயதிலேயே வில் அம்பு எய்தல் விளையாட்டில் 8 மீட்டர் தொலைவு இலக்காக வைத்து 1,111 அம்புகளை எய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் மூன்றரை மணி நேரத்தில் இந்தச் சாதனையை செய்தார். சஞ்சனா 5 முறை வில்வித்தை விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கின்னஸ் சாதனை […]

மேலும்....