முற்றம் : குறும்படம்

 குறும்படம் :  சவடால் சவடால்காரர் ஒருவரைப் பற்றிச் சொல்லும் குறும்படம் இது. பெயரும் சவடால்தான். பார்த்த உடனே ஒருவரைப் பற்றிய முன்முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் கதையின் சாரம். கதையில் மனைவி வலியுறுத்தியும் சாப்பிடாமல் செல்கிறார் சவடால் பேர்வழி. பேருந்தில் சரியான சில்லறையை கொடுத்து நடத்துநரிடம் பாராட்டுப் பெறுகிறார். தேநீர் இடைவேளையின் போது டீத்தூளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி கடைக்காரரின் கோபத்துக்குள்ளாகிறார். வாழைப்பழம் விற்கும் சிறுவனிடம் விலைகுறித்து விமர்சனம் செய்து அவனது கோபத்தை சம்பாதித்துக் கொள்கிறார். […]

மேலும்....

குறும்படம் : ஜீவநதி

முற்றம் குளிர்பதனம் செய்யபட்ட ஒரு பெட்டியில் ஒரு பெண் படுக்கவைக்கப் பட்டிருக்கிறாள். சுற்றிலும் சொந்தக்காரர்கள் சோகத்துடன் இருக்கின்றனர். அந்தப் பெட்டியின் பூட்டில் ஜாதி என்று எழுதியிருக்கிறது.  செத்துக்கிடக்கும் பெண்ணின் அப்பாவின் இடுப்பில் அந்தப்பூட்டின் சாவி தொங்குகிறது.  இப்படியொரு காட்சியை ஆணவப் படுகொலைக்கான காட்சியாக தனது குறும்படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் டியூடு விக்கி. கொடூரமான கற்பனையாக இருந்தாலும், இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றுதான் எண்ண முடிகிறது. வழக்கமாக இப்படிப்பட்ட படுகொலைகள் திருமணம் செய்து கொண்டபிறகுதான் நடைபெறும். ஆனால் […]

மேலும்....

‘உண்மை வாசகர் கடிதம்’

போரூர், 4.1.2018 மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்! ‘உண்மை’ செப்டம்பர் இதழைப் படித்தேன். மஞ்சை வசந்தனின் கட்டுரை என்னை நெகிழச் செய்தது. நான் ஓய்வு பெற்ற பின்னரே பெரியாரைப் படிக்கத் துவங்கினேன். ஆனால் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற சிறு நூலை நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது படித்தேன். இன்றும் என்னிடம் 2015 வெள்ளத்தில் தப்பிய நூல் அது. பெரியாரின் ஈரமான மனசு, அறிஞர் அண்ணாவை விமான நிலையத்தில் போய்ச் சந்தித்தது, என்னை உலுக்கிவிட்டது. நான் தற்சமயம் […]

மேலும்....

முற்றம்

செயலி Duolingo 1 அயல்நாட்டிற்கோ அல்லது பிற மாநிலங்களுக்கோ செல்லும்போது நமக்கு பெரும் பிரச்சனையாய் இருப்பது மொழி. ஆங்கில மொழி பெரும்பாலும் பேச்சு வழக்கில் இருந்தாலும் நாம் சந்திக்கும் அனைவரும் அம்மொழியை அறிந்திருப்பர் என்பது உறுதியல்ல. குறைந்தபட்சம் அடிப்படைத் தகவல்களைப் பெற்றிடவாவது அம் மொழி அவசியம்தானே! நாம் விரும்பும் மொழியை, உச்சரிப்புகள், படங்கள் மூலமாக அடிப்படையிலிருந்து கற்றிட இச் செயலி பயன்படுகிறது. இந்தி, உருது, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளைக் கற்றிடவும், நாம் கற்ற அயல்நாட்டு மொழிகளை […]

மேலும்....

முற்றம்

குறும்படம் (COMMA) உயர்கல்வி நிலையங்களில் ஜாதி பேதம்  மாணவர்களை எவ்வளவு கொடூரமாக பாதித்திருக்கிறது என்பதை ஒரே ஒரு காட்சி மூலமே எல்லாக் கொடுமைகளையும் உணர்த்தி விடுகிறது இந்த 9:55 நிமிடம் ஓடும் குறும்படம். ஜாதியைச் சுட்டிக்காட்டி ஒருவரை தொடர்ந்து இழிவுபடுத்தியதால் மிகுந்த தன்னிரக்கத்திற்கும், துன்பத்திற்கும் ஆளான அந்த மாணவன் தற்கொலைக்குத் துணிந்து அதற்கு முன் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் அவன் எழுப்பும் ஜாதி தொடர்பான கேள்விகள் பார்க்கின்ற நம்மையும் பதற வைக்கிறது. இறுதியில் தூக்குக் கயிற்றை […]

மேலும்....