காரல்மார்க்ஸ் பிறப்பு – 5.5.1818

உலக வரலாற்றில் மங்காப்புகழுடன் தலைசிறந்து விளங்குபவர் கார்ல் மார்க்ஸ். 5.5.1818 அன்று ஹெய்ன்ரிச் மார்க்ஸ், ஹென்றியேட்டா பிரஸ்பார்க் ஆகியோர்க்கு மகனாக ஜெர்மனியில் டிரைலர் என்னும் இடத்தில் பிறந்தார். காரல் மார்க்சின் பெற்றோர்கள் ஜெர்மனியில் வழக்குரைஞர்களாகப் பணியாற்றி வந்தனர். காரல் மார்க்ஸுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தபோதிலும் தத்துவமும் வரலாறும் பிடித்திருந்தது. தனது ஆருயிர் நண்பர் ஃபிரடெரிக் ஏங்கல்சுடன் இணைந்து கம்யூனிசக் கொள்கையைப் பிரகடனம் செய்தார். உலகப் பட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் (மூலதனம்) தத்துவத்தைத் தந்தவர். தலைசிறந்த புரட்சியாளராக, தொழிலாளி […]

மேலும்....

முனைவர் மு. வரதராசனார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனை

‘‘முதுநிலைத் தேர்வுக்காக முயன்று படித்து வந்தேன். தேர்வுக்குக் கட்டணம் செலுத்தப் புறப்பட்ட நேரம் இராகு காலமாக இருந்தது. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்து புறப்படும்போது முடிதிருத்தும் தொழிலாளி எதிரே வந்தார். அப்போது உறவினர் ஒருவர், ‘‘சகுனம் சரியில்லை தம்பி! மேலும் இப்போது இராகு காலம் வேறு. அது கழிந்த பின் புறப்படு’’ என்றார். “எனது முயற்சியில் குறையில்லை என்றால் நான் தேர்ச்சி பெறுவது உறுதி. அப்படி நான் தேர்ச்சி பெறாமல் போனால் […]

மேலும்....

துணுக்குகள்

      நன்றிக்கு ஏன் நாயை உதாரணமாக்குகிறோம்? மற்ற பிராணிகள்… இணையைத் தேடியதும் மனிதனை மறப்பவை. ஆனால், நாய்களோ வளர்ந்த இடத்தை மறக்காதவை; வளர்த்த மடியை துறக்காதவை. எனக்குத் தெரிந்த எளிய குடும்பத்தில் ஒருவர், அழகான நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். அவருக்குத் தெரிந்த  பணக்காரர், அதை வளர்க்க ஆசைப்பட்டு வாங்கி தன்னுடைய மாளிகைக்கு எடுத்துச் சென்றார். அந்த நாயோ… புதிய இடத்தில் சுவையான உணவைப் பரிமாறினாலும், ஒரு வாய்கூட உண்ண மறுத்துவிட்டது. நான்கைந்து நாட்கள் […]

மேலும்....

துணுக்குகள்

கேழ்வரகு இட்லிஒரு கப் உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து, நீரில் கரைத்த கேழ்வரகு மாவுடன் (3 கப்) சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, 6 _ 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து, பின் ஊற்றினால் கேழ்வரகு இட்லி தயார். ————————————————————————————————————————————————————————— உலகில் மகிழ்வாக உள்ள மக்கள் அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி உலகில் மிக மகிழ்ச்சியாக உள்ள (Happiest) மக்கள் டென்மார்க் தேசத்து மக்களாம். இதில் […]

மேலும்....

துணுக்குகள்

நன்மை செய்யும் நுண்ணுயிர்களை அழிக்கும் சோப்புச் சேர்மம் கைக்கழுவும் சோப்பு முதல் பொம்மைகள் வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் இருக்கும் ட்ரைக்ளோசான் என்னும் ஒரு பாக்டீரியா – பூஞ்சை எதிர்ப்பு ரசாயனம், நம் குடலில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களை சேர்த்தே அழித்துவிடுவதுடன், சமநிலையையும் குலைப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. ஷாம்பூ, டூத் பேஸ்ட், மவுத் வாஷ், டியோடரண்ட், சோப்பு, சமையலறை பொருட்கள், குழந்தைகளின் பொம்மை என நாம் அன்றாடம் நுகரும் பொருட்களில் இந்த ட்ரைக்ளோசான் […]

மேலும்....