உங்களுக்குத் தெரியுமா?

நீதிக்கட்சித் தலைவர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மாநகர முதல் மேயராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும் பிச்சைக்கார மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டன என்ற வரலாற்றுச் செய்திகள் உங்களுக்குத் தெரியுமா?    

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

1960ஆம் ஆண்டு காலகட்டத்தில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட “சோதனைக்குழாய் குழந்தை” பற்றி 1938ஆம் ஆண்டிலேயே கருத்துத் தெரிவித்தவர் தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்கு கடவுள் வேண்டுமானால் உங்களை இழிவுபடுத்தாத, சூத்திரர்களாக்காத, பஞ்சமர்களாக்காத கடவுள்களை வைத்துக் கொள்ளுங்கள். ராமனும், கிருஷ்ணனும் நம் கடவுளாய் இருப்பதற்குத் தகுதியானவர்களா? என்று தந்தை பெரியார் அன்றைக்கே கேள்வி எழுப்பினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

திருக்குறள் பற்றிய செய்திகள் எளிய மக்கள் அறிந்திராத காலத்திலேயே (1929) மலிவு விலையில் திருக்குறளைப் பதிப்பித்துப் பரப்பியவரும், திருக்குறளைப் பரப்பவே தனி மாநாடு (1949) நடத்தியவரும் தந்தை பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

“தீக்குறளை சென்றோதோம்” என்ற ஆண்டாளின் திருப்பாவை பாட்டுக்கு_ “திருவள்ளுவரின் தீய திருக்குறளை ஓதமாட்டோம்” என்பதே அர்த்தம் என்று பேசியவர்தான் காஞ்சி சங்கராச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....