மனமின்றி அமையாது உலகு!(10) மனச்சோர்வு கற்பித்த புறக்காரணங்கள், அசலான அகக்காரணங்கள்

‘‘2014 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். ஒரு நாள் அதிகாலை வேளை. அந்த நாளின் காலையை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. அது மற்ற நாட்களின் காலை போல அல்ல. மெல்லிய வெளிச்சங்களுடன், ஏராளமான புதிர்களுடன் விடியும் காலைப் பொழுதுகளின் மீது எனக்கு எப்போதும் தீராத ஆர்வம் உண்டு. மிச்சமிருக்கும் தூக்கம் நிரம்பிய கண்களும், அந்த நாளின் மீதான ஏராளமான எதிர்பார்ப்புகள் நிரம்பிய மனமும் என எல்லாக் காலையும் எனக்கு ஆர்வமூட்டுவதுமாகவே இருக்கும். ஆனால், அந்தக் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (352) தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 10ஆம் ஆண்டு விழா ! – கி.வீரமணி

திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் விழா திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் 29.1.2006 அன்று நடைபெற்றது. தலைவர் நடராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட ஆளுநர் கே.என். பிள்ளை விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் நாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது, ‘‘ஒரு காலத்தில் பெண்களை அழுத்தி வைத்திருந்தனர். இப்போது அனைத்திலும் பெண்கள் முதலிடத்தில் உள்ளனர். படிப்பு என்பது வேறு; அறிவு என்பது வேறு. மாணவர்கள் பட்டறிவும், பகுத்தறிவும் பெற வேண்டும். […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்குமுறைக்கு அஞ்சி “தேசபக்தர்கள்” வாய்மூடிக் கிடந்தபோது, பகத்சிங் செயலைப் பகிரங்கமாக ஆதரித்து 1931இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1938ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு 167 நாள்கள் கடும் சிறைக் கொடுமை அனுபவித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டவுடன் இனி பார்ப்பனர்களை அமைச்சராகவோ, காங்கிரஸ் தலைவராகவோ நியமிக்கக் கூடாது என்று காங்கிரஸ்காரர்களே மராட்டியத்தில் தீர்மானம் போட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....