கவிதை: பெற்றோர்?

ஆசையால் பெற்றோர் அடியாளாய்ப் பெற்றோர்   கூலிக்காய் பெற்றோர் கூட்டத்திற்காய் பெற்றோர்   வாரிசுக்குப் பெற்றோர் வாடகைக்குப் பெற்றோர்   கொள்ளிக்காய் பெற்றோர் பள்ளிக்காய் பெற்றோர்   பெயர்சொல்லப் பெற்றோர் பெருமைக்காய் பெற்றோர் ஆண்மை அறிவிக்க அவசரமாய்ப் பெற்றோர்   அவனியில் சிலரே அறிந்து பெற்றோர். – மஞ்சை வசந்தன்

மேலும்....

தியாகத்தின் திருவுருவமான திராவிடத்தாய் அன்னை மணியம்மையார்!

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்கச் சிறப்புக் கட்டுரை  கடந்த இதழ் தொடர்ச்சி …. தந்தை பெரியார் சிறையில் இருந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இயக்கத்தை வழிநடத்தினார் . பெரியார் ஜாதி ஒழிப்பு போராட்டம் நடத்தியபோது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது இயக்கத்தை வெளியில் இருந்து நடத்தும் பொறுப்பை பெரியார் மணியம்மையாரிடம் ஒப்படைத்திருந்தார் . இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு […]

மேலும்....

சிறுகதை : விதி வென்றதா?

விந்தன் இன்று நேற்றல்ல; என்றுமே தன் முதுகில் ஏதாவது சுமந்து கொண்டு வந்தால்தான் சுப்பன் எஜமான் வீட்டுக்குள் நுழைய முடியும். உதயசூரியன் உச்சி வானத்துக்கு வரும்வரை அவன் உள்ளமும் உடலும் சோர வயலில் உழைத்துவிட்டுப் பசிக்குக் கூழ் குடிக்க வந்தால்கூட, அவனுக்கு ‘வரவேற்பு’ வாசலோடுதான்! இந்தச் சம்பிரதாயத்தையொட்டி, அன்றும் வாசலில் நின்றபடியே, ‘அம்மா!’ என்று இரைந்தான் அவன். “யாரடா, அது?’’ என்று ‘டா’ போட்டுக் கேட்டாள் உள்ளே இருந்த எஜமானியம்மாள். வயதில் சுப்பனைவிட அவள் எவ்வளவோ சிறியவள்தான்; […]

மேலும்....

முகப்பு கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா அர்ப்பணிப்பின் பெருவிழா!

மஞ்சை வசந்தன் திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்வே அர்ப்பணிப்பு வாழ்வு! அவருக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள். சராசரி பெண்ணின் கனவுகள் கற்பனைகளையெல்லாம் புறந்தள்ளி, உலகின் மாபெரும் தலைவர் தந்தை பெரியாரின் உற்ற துணையாய், பெற்றதாயினும் உற்ற தாயாய், பணிப் பெண்ணாய், தந்தை பெரியாருக்குப் பின் தலையேற்ற தலைவராய், தனக்குப் பின்னும் சரியான தலைவரை இந்த இயக்கத்திற்கு அளித்த ஆற்றலாளராய். இந்தியா சந்தித்த அவசர நிலை காலத்தில் அஞ்சாது, அயராது, […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் !: பார்ப்பனர்களின் ஆயுதம்

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்போது நடக்கிற போராட்டம் தேவ-அசுரப் போராட்டம்தான். வேதப்படி, சாஸ்திரப்படி, புராணப்படி, அகராதிப்படி பார்த்தாலும் இது விளங்கும். அசுரர்கள் என்றால் நாம்தான். தேவர்கள் என்றால் பார்ப்பனர்கள். இந்த இரண்டு இனத்தாரிடையே நீண்ட காலப் போர் அதாவது, இராமாயண காலம் முதல் இந்த ஆச்சாரியார் காலம்வரை நடந்து கொண்டுதான் வருகிறது. இராவணன், இரணியன், சூரன், சூரபத்மன் எல்லாரும் ஒழிந்ததற்கு மூலகாரணம் தேவ – அசுரப் போராட்டம்தான். தேவர்கள் என்றால் மேலான சக்தியுள்ளவர்கள் கடவுள்கள். – தேவர்கள் […]

மேலும்....