கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்

டில்லியில் 5.2.2019 அன்று இடஒதுக்கீடு வழிமுறை _ முன்னுள்ள அறை கூவல்கள்’’ (Reservation Policy – Challenges Ahead)    எனும் தலைப்பிலான சமூக நீதிக் கருத்தரங்கினை சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றம் (Lawyer’s Forum for Social Justice) ஏற்பாடு செய்திருந்தது. டில்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள அரசமைப்புச் சட்ட மன்றத்தில், துணை சபாநாயகர் அரங்கில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்க நிகழ்விற்கு சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றத்தின் நிர்வாக அறக்கட்டளையாளரும், உச்சநீதிமன்ற முதுநிலை […]

மேலும்....

கவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது ! எங்கெங்கும் எழுச்சி ! எதிரிகள் மிரட்சி !

–    மஞ்சை வசந்தன் இன்றைக்கு ஏன் மனுதர்மத்தைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள், அவர்களுக்காக மிக முக்கியமான செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்திய அரசியல் சட்டம் நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. அதில் சில குறைகள் இருப்பினும், மதச் சார்பின்மை, சமத்துவம், சமூக, பொருளாதார, அரசியல் நீதி, சுதந்திரம், தனிமனித கண்ணிய காப்பு, (JUSTICE, LIBERTY, EQUALITY, FRATERNITY)  உள்ளன. ஆனால், மனுதர்மம் எப்படிப்பட்டது?    “பிராமணன் சாப்பிட்ட மிச்சம், பழைய துணிகள், ஒதுக்கித் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்

தந்தை பெரியார் தோழர்களே, உங்களில் அநேகருக்குத் தெரியாவிட்டாலும் ஆசிரியர்கள் பலருக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் ஒன்றும் அதிகம் படித்தவனல்லன். நான் எவ்வாறு  ஏதாவது பேசுகிறேன் என்றால், அவை எல்லாம் இப்போது படிப்பு என்று சொல்லப்படுகிறதன் மூலமாய் அறிந்து பேசப்படுகிறது என்பதும் இல்லாமல் என்னுடைய அனுபவத்தால் பிறருடைய கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக ஆராய்ந்து கண்ட, பெற்ற அனுபவங்கள் மீதுதான் அதன் பேரால்தான் எனக்குச் சரியென்று தோன்றுகிற விஷயங்களைப் பேசுகிறேன். இந்தப்படி நான் பேசுகிற விஷயங்களை, சொல்லுகிற விஷயங்களை […]

மேலும்....

தலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா?

1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது; உச்சநீதிமன்றத்தில் அந்நாளைய பா.ஜ.க. முதலமைச்சர் (உ.பி.) கல்யாண்சிங் துரோகமும், இராணுவம் நிறுத்தப்பட்டிருந்தாலும்கூட, அவர்களை செயல்படாமல் செய்த அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் மறைமுக ஒத்துழைப்புமே இதற்குக் காரணம். மண்டல் பரிந்துரை அமலாக்கத்தினை  எதிர்க்கும் ஆயுதமே! மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் ஒன்றான 27 சதவிகித வேலை வாய்ப்பினை மத்திய அரசு நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு அளித்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசின் ஆட்சியைக் கவிழ்த்ததோடு, ‘‘கமண்டலை’’ – மண்டலுக்கு எதிரான ஆயுதமாக – ஆர்.எஸ்.எஸ். […]

மேலும்....