மருத்துவம் : நிலவேம்பு

டெங்குக் காய்ச்சல், விஷக் காய்ச்சல் மற்றும் சிக்கன் குனியா போன்ற பல வகையான காய்ச்சல் நோய்களுக்கும் ‘எபோலா’ என்ற காய்ச்சலைக் குணப்படுத்தவும் நிலவேம்புக் குடிநீர் பயன்படுத்தப்படுகின்றது. அகத்தியர் குண பாடத்திலும் நிலவேம்பின் மருத்துவப் பயன்களை விவரிக்கும் பாடல் ஒன்று உள்ளது. “வாதசுரம் நீரேற்றம் மாற்றுஞ் சூதோடே காதமென ஓடக் கடியுங்காண் மாதரசே பித்த மயக்கறுக்கும்  பின்புதெளி வைக்கொடுக்கும் சுத்தநில வேம்பின் தொழில்’’ நிலவேம்பின் மருத்துவக் குணங்களும் பயன்களும் ஜுரம், வீக்கம், ஜலதோஷம் போன்ற குறைபாடுகளைக் குணமாக்க வல்லது. […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)

அம்பேத்கரை உயர்வாகப் பாராட்டிய அய்யா பெரியார்! நேயன் பெரியார் ஒப்புக்கொண்டவர் சிலர்தான். பெரியார் ஒருவரை அல்லது ஒன்றைப் பாராட்டுகிறார் என்றால் அதன் உள்பொருள் ஆயிரம்! அதன் சிறப்பும் அதிகம்! அவர் பாராட்டு மக்கள் நலன் சார்ந்து மனிதநேயம் சார்ந்தே இருக்கும்! புத்தர், வள்ளுவர் வரிசையில் அம்பேத்கரும் இடம் பெறுகிறார். 1891இல் பிறந்த அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக மாற்றி, இந்தியா முழுமைக்கும் அறிமுகப்படுத்தியது ‘மகத்’ போராட்டமே. 1927 டிசம்பரில் சவுதார் குளத்தில் ஒடுக்கப்பட்டோரையும் குடிநீர் எடுக்க வைக்கும் […]

மேலும்....

நிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன்? ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்!

தொகுப்பு  : க.கலைமணி இந்திய இந்து சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் சிலர் உயர்ந்தவர்கள், பெரும்பான்மை மக்கள் சூத்திரர்கள், பஞ்சமர் என பல நூறு ஆண்டு காலமாக கற்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சூத்திரர், பஞ்சமர் எனப்பட்ட மக்களுக்கு கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் மறுக்கப்பட்டன. அந்த மக்கள் பல இழிவுகளை சுமந்து வந்தனர். ஜாதியின் அடிப்படையில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்பின் அடிப்படையில் சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் இடஒதுக்கீடு […]

மேலும்....

பெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி!

சென்னை புளியந்தோப்பில் உள்ள பட்டாளம் பகுதியில் வசித்து வருபவர் ஜோதி. தற்சமயம் எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை பொருளாதாரம் பயின்று வருகிறார். தன்னம்பிக்கையின் உருவமான இவர், கைப்பந்து (Volly Ball) ஆட்டத்தில் பல சாதனைகள் புரிந்து வருபவர். சாதனையாளரான ஜோதி கூறுகையில், “சென்னை சூளையில் உள்ள செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே கைப்பந்து போட்டி மீது ஆர்வம் கொண்டேன். 8ஆம் வகுப்பு படிக்கும்போதே கைப்பந்து பயிற்சி பெறத் துவங்கிவிட்டேன். அந்தப் பள்ளியில் உள்ள பயிற்சியாளர் ஜான் ஏஞ்சல் […]

மேலும்....

சிறுகதை : கடவுள் நகரங்கள்!

  -ஆறு.கலைச்செல்வன் “ஏங்க, என் தோழி சாரதா நம்ம எல்லோரையும் அவ ஊருக்கு வரச் சொல்லி ரொம்ப நாளா போன் பண்ணிக்கிட்டு இருக்கா. இந்த வாரம் நானும், நீங்களும் நம்ப புள்ளையை அழைச்சிக்கிட்டு போயிட்டு வரலாமுங்க’’, என்று கணவன் பாபுவிடம் ஆசையாகக் கேட்டாள் தாமரை. “என்ன திடீர்னு கூப்பிடுறாங்க. ஏதாவது விசஷேமா?’’ என்று கேட்டான் பாபு. “அவளோட ஊரில் தேரோட்டம் நடக்குதாம். அவள் இருக்கிற இடம் கடவுள் நகரமாச்சே. அதோட அவள் இப்ப மட்டுமா கூப்பிடுறா! வருஷா […]

மேலும்....