ஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே! சட்டம் செய்க!

கே:       திராவிட இயக்க வரலாறே அறியாதவர்கள், ‘திராவிட’ என்ற அடைமொழியோடு கட்சி நடத்துவது பற்றி?-                 – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப:           தமிழ்நாட்டு அரசியலில் இவையெல்லாம் வினோத விசித்திரங்கள். அண்ணா கொள்கை தெரியாதவர்கள் அ.தி.மு.க. என்ற பெயரில் இயங்குவது! ‘திராவிட’ என்பதற்கு நேர் எதிராக ஆரிய தத்துவங்களின் அடிமைகள் இப்படி ஒரு ஒப்பனை மூலம், அரசியலை நல்ல முதலீடாக்கி வாழுகின்றனர்; கொடுமையிலும் கொடுமை! கே:       வைரமுத்துவின் பெரியார்பற்றிய பேச்சு இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதுபோல் நிகழ்வுகள் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : ”பெரியார் கொடுத்த தந்தி”

வ.க.கருப்பையா தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகத்தை ஈரோட்டில் இருந்த தன் வீட்டுக்குக் கொண்டு போனார் பெரியார். தலைவர்களும் காமராஜர் உள்ளிட்ட தொண்டர்களும் ஈரோடு போவார்கள். அங்கு பெரியாரின் வீட்டையும், உபசரிப்பையும் கண்டு காமராஜர் உள்ளிட்டவர்கள் வியந்து போனார்கள். “இவ்வளவு பெரிய பணக்காரர் இத்தனை எளிமையாக இருக்கிறார் என்று நெகிழ்ந்து பாராட்டினார்கள்.” இப்படி பெரியாரைக் கண்டு வியந்த காமராஜர் பின்னாளில் தன் சீரிய உழைப்பால் ‘முதல்வர்’ சிம்மாசனத்தில் அமர்ந்தார். அந்த நாளில் அன்னை சிவகாமி அம்மையார் அடைந்த மகிழ்ச்சியைவிட பெரியார் […]

மேலும்....

பெண்ணால் முடியும் …. : ஏழ்மையை வென்று டி.எஸ்.பி.யான சரோஜா!

திருநெல்வேலி மாவட்டம் சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. அப்பா முருகானந்தம் திரையரங்கில்  வேலைசெய்து வருகிறார். அம்மா பால்தாய் பீடி சுற்றும் தொழிலாளி. மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவருக்கு அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்குப் பொருளாதார பலம் இல்லை. “அம்மாவும் அப்பாவும் ஏற்கெனவே ரொம்ப கஷ்டப்படுறாங்க. இவ்வளவு கஷ்டத்துக்கும் நடுவில் காலேஜ் போக முடியலை. பகுதி நேரமாக ஏதாவது வேலை செய்துகிட்டே தொலைதூரக் கல்வியில் பட்டப் படிப்பு படிக்க முடிவெடுத்தேன்’’ என்கிறார். […]

மேலும்....