‘சிந்தனைச் சிற்பி’

ம. சிங்காரவேலர் நினைவு நாள் : 11-02-1946 ‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலர் தலைசிறந்த சிந்தனையாளர். இந்தியத் துணைக் கண்டத்தில் பொதுவுடைமை இயக்கத்தையும், அதன் சிந்தனையையும் உருவாக்கிய முன்னோடிகளில் தலையாயவர். பகுத்தறிவுக் கருத்துகளையும் அறிவியல் சிந்தனைகளையும், பரப்பியதில் அவரொரு வழிகாட்டியாக விளங்கியவர். அரசியல், அறிவியல், பொருளியல், மெய்யியல், உளவியல், வானியல் போன்ற துறைகளைத் தமிழில் முதன்முதலில் எளிமையாக எழுதிக் காட்டியவர். தந்தை பெரியார் தாம் நடத்திய ‘குடிஅரசு’ ஏட்டில் அவரது கருத்துகளை வெளியிட்டதோடு நூல்களாகவும் பாமர மக்களிடம் கொண்டு […]

மேலும்....

‘மொழிஞாயிறு’

ஞா.தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் : 07-02-1902 ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் ஓர் ஊழி அறிஞர்; தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; இலக்கியப் பெட்டகம்; வாராது வந்த மாமணி; தமிழ் மானங் காத்தவர்; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர்மூச்சாகக் கொண்டவர். தமிழரின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர் கால்டுவெல் பெருந்தகை; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்த செம்மல், நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; அதை மரமாக வளர்த்து மாண்புறச் செய்தவர் செந்தமிழ்ச் […]

மேலும்....

வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள் – 2

ச. தீபிகா தொல்லியல் ஆய்வாளர் இலக்கியங்கள் அவை உருவான காலகட்டத்தில், அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நிலைக்கும் வகையில் பதிவு செய்பவை. அவ்வகையில் பண்டைத் தமிழர்களின் வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகளை சங்க கால இலக்கியங்களில் இருந்தே நாம் பெறுகிறோம். பல அறிஞர்கள் இச்செய்திகளின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்தி, தங்களின் அய்யங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற வினாக்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள தொல்லியல் அகழாய்வுகளும், கள ஆய்வில் கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான சங்க காலக் கல்வெட்டுகளுமே […]

மேலும்....

தமிழர் தலைவர் ஆசிரியரின் பொங்கல் பரிசாக வெளிவந்த “தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?” வெளியீட்டு விழாவில் விற்பனைச்சாதனை

க.கலைமணி தந்தை பெரியார் பற்றி சில புரட்டான குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ‘தமிழை காட்டுமிராண்டி மொழி’ என்றார். ‘தமிழ் கலைஞர்களைத் தாக்கினார்’ கலைஞர்களை வெறுத்தார். ‘அவருக்கு இலக்கியம் தெரியாது’. ‘திராவிடர் என்னும் கோட்பாட்டை உருவாக்கி தமிழர் உரிமைகளை பின்னுக்குத் தள்ளினார். ‘தமிழ் இலக்கியங்களை இழிவுப்படுத்திப் பேசினார்’ என்பது போன்ற அடிப்படை ஆதாரமற்ற இதற்கு முன்பே பலரால் சொல்லப்பட்டு வாந்தியெடுக்கப்பட்ட சொத்தை வாதங்கள் அவை. இவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக தந்தை பெரியார் தமிழுக்குச் செய்த தொண்டுகளையும், இந்தி, […]

மேலும்....

காதல் என்பது குற்றச் செயலா?

பொதட்டூர் புவியரசன் காதல்! அன்பு, ஆசை, ஆர்வம், அரவணைப்பு என அனைத்தையும் உள்ளடக்கிய வார்த்தை. இலக்கியங்களில் காணப்பெறும் கற்பு, களவியல், வீரம், வேட்கை, உடன்போக்கு இவை யாவும் எதன் விளைவு? அவ்வளவு ஏன்? திருக்குறளில் எழுதப்பட்டுள்ள மூன்றாம் பாலின் முகவரி காதல்தானே? ஆங்கிலக் கவிஞன் ‘வேர்ட்ஸ் ஒர்த்’ தன் ‘டேஃபடல்ஸ்’ என்ற கவிதையில் காட்டும் காதல் வயப்பட்ட மனநிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் பாலியல் மருத்துவரைப் போன்று ஆதியோடந்தமாக எழுதியுள்ளார். “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் […]

மேலும்....