மானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா?

தாடியில் நெருப்புப் பிடித்து எரியும்போது அதில் சுருட்டுப் பற்ற வைக்க நெருப்புக் கேட்கும் கொடிய கிராதகர்களைப் போல் நாடு மானமிழந்து, அறிவிழந்து, செல்வமிழந்து, தொழிலிழந்து கொடுங்கோன்மையால் அல்லற்பட்டு நசுங்கிச் சாகக்கிடக்கும் தருவாயில் சற்றாவது ஈவு, இரக்கம், மானம், வெட்கம், மனிதத் தன்மை ஆகியவை இல்லாது சாண் வயிற்றுப் பிழைப்பையும் தமது  வாழ்வையுமே பிரதானமாக எண்ணிக்கொண்டு சுயராஜ்யம், இராம ராஜ்யம், தேசியம், புராணம், சமயம், கலைகள், ஆத்திகம் என்கின்ற பெயர்களால் மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பது ஒரு பிழைப்பா? […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : ஆரியர் – திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் யார் நாட்டை ஆண்டாலும் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆச்சாரியாரே ஆளட்டும்; அல்லது காங்கிரசுக்காரர்களே ஆளட்டும். மனிதப்பிறவிக்கு  அப்பாற்பட்டது ஆளுவதாயிருந்தாலும் சரி; இராமாயணத்திலே சொல்லப்பட்டிருப்பது போல் ஒரு ஜோடி செருப்பு இந்த நாட்டை ஆளுவதாய் இருந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. எங்களுக்கு இருக்கிற கவலை எல்லாம் ஆளுகிறவர்கள் நாணயமாக, நேர்மையாக, உள்ளபடியே மக்களின்  நலத்தையும், வாழ்வையும், முன்வைத்து ஆட்சி நடத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் இலட்சியம். அதை விட்டு […]

மேலும்....

தலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்!

   17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டுவிட்டன. எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூடுதல் இடங்களைப் பிரதமர் மோடி _ பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூட்டு வகுத்த வியூகம், அவர்களுக்கு வடக்கு, கிழக்கு, மேற்கு _ இந்திய மாநிலங்களில் பெருத்த வெற்றியைத் தந்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த வெற்றிக்குப் பின்னே அடித்தளம் அமைத்தது ஆர்.எஸ்.எஸ். என்பதை எதிர்க்கட்சிகள், முற்போக்கு சக்திகள் உணரவேண்டும். நோய் நாடி நோய் முதல் நாடத் தவறக்கூடாது. 2014 இல் ஆளுங்கட்சியாகி, பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு, […]

மேலும்....

அண்ணாமலைச் செட்டியார்

60-70 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் பல்கலைக்கழகத்தை அவர் அமைக்காவிட்டால் உயர்கல்வி நலம், பொங்குமாக்கடல் போல் இத்துணை அளவு பெருக்கெடுத்திராது. இன்ற நம்மிடையே உள்ள அரசியல் விற்பன்னர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பொருளாதார மேதைகள் ஆகியோர் பலரும் இப்பல்கலைக்கழகத்திலிருந்து தோன்றியவர்களே!

மேலும்....

நுழைவாயில்

வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்! – கி.வீரமணி இந்தியா முழுவதும் பெரியார் தேவை! இந்தத் தேர்தல் தந்த பாடம் – மஞ்சை வசந்தன் பெரியார்! (கவிதை) – கலைஞர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்! அண்ணல் அம்பேத்கர் – நேயன் குப்பைத் தொட்டி (சிறுகதை) – கலைஞர் கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்! – கி.வீரமணி ‘விடுதலை’யை வாங்கிப் படியுங்கள் தாங்கிப் பிடியுங்கள்! – கி.வீரமணி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெரியார் நினைவிடத்தில் மரியாதை! 

மேலும்....