செயலி

 U-dictionary ஆங்கிலச் சொற்களுக்கான அர்த்தம் தெரிந்துகொள்ள  U-dictionary செயலியை பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை உங்கள் புதிய மொபைலை திறக்கும்போதும், ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தெரிந்து கொள்ளலாம். சொற்கள் மட்டுமல்ல, சொற்றொடருக்கான பொருளையும் தெரிந்து கொள்ளலாம்.  U-dictionary  செயலியைத் திறந்து தட்டச்சு தேடினால் போதும், உடனடியாக பொருள் தெரிந்துகொள்ளலாம். தட்டச்சு செய்யக்கூட தேவையில்லை Scan அல்லது Photo எடுத்துக்கூட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சொற்றொடருக்கான  பொருளை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். இது எளிமையான உங்கள் கையடக்க அகராதியாகவே பயன்படும். https://play.google.com/store/apps/details?id=com.youdao.hindict&hl=en_IN […]

மேலும்....

குறும்படம்

‘நீமோ’ பள்ளிக் கூடத்துக்குச் செல்லும் சிறுவனுக்கு அம்மா கொடுத்தனுப்பும் ‘பாக்கெட் மணியை’ அவன் தனக்கென்று செலவழிக்காமல், ஒரு மீன் குட்டியை வாங்கி வளர்க்கிறான். அந்த மீனுக்கு தான் பார்க்கும் கார்ட்டூன் தொடரில் வரும் மீனின் பெயரான ‘நீமோ’ _ என்று பெயரையே வைத்து வளர்க்கிறான். ஒரு நாள் அந்த மீன் இறந்து போகிறது. சிறுவன், கசிந்துருகும் கண்ணீருடன், ‘நீந்து நீமோ’ _ என்று அழுதபடியே சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்த மீன் இறந்ததற்கும் 2016, நவம்பர் 8ஆம் […]

மேலும்....

திருச்சி கருஞ்சட்டை மாநாட்டுத் தீர்மானங்கள்!

வீரவணக்கத் தீர்மானங்கள்: *    தாய்மொழி, இன, நாட்டுரிமை களுக்காகப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும், 1938–1965 மொழிப் போராட்டங்களில் உயிரீந்த நடராசன், தாளமுத்து, அரங்கநாதன், சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற மொழிப் போராளியர்களுக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக் களங்களில் இதுநாள்வரை உயிர்நீத்த கீழ்வெண்மணியின் 44 தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட் டத்தில் உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஈகியர்களுக்கும், பார்ப்பனிய மற்றும் மத வெறிகளுக்கு எதிராக மக்கள் நேயத்தோடுப் போராடி உயிர்நீத்த […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

சிலம்பாட்டச் செல்வி ஆசிய சிலம்பாட்டப் போட்டி செப்டம்பர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. அதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 8 நாட்டு வீரர், வீராங்கனைகள் திறமை காட்டினர். அப்போட்டியில் தனிநபர் பிரிவில் முதலிடமும், நெருப்பு உமிழ்தல் மற்றும் இரட்டைக் கம்பு பிரிவுகளில் இரண்டாம் இடமும், அணிகள் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த யோக தீப்ஷிகா. சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முதலாமாண்டு படிக்கிறார். அப்பா சங்கரபாண்டி […]

மேலும்....

பொன்.மாணிக்கவேல் ஒரு மயக்க பிஸ்கட்

கே:       இந்துக் கோயில்களை இந்துக்-களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிலர் கூறுவது சரியா? ஊடகங்கள் ஏதோ உரிமை மீட்புப் போராட்டம் போல் அதைக் காட்டும் நோக்கம் என்ன?                 – உ.கனிமொழி, இராமலிங்கபுரம், சென்னை-71 ப:           முழுக்க முழுக்க தவறு; பார்ப்பனக் கொள்கை, அர்ச்சகர், பூஜாரிகள், மடங்கள், மடாதிபதி போர்வையில் காவிச் சுரண்டல் காலிகள் வசம் வடநாட்டில் நிகழும் சர்வகொள்கைக்கு வழியில்லையே என்பதால் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற பார்பனியத்திற்கு விரிக்கும் சூதுவலை.                 அதற்கு கோயில் சிலை திருட்டு என்ற தேனைத் […]

மேலும்....