அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா?

சிகரம் நாராயணனின் வாகனமான கருடன் புறப்படத் தயாராகப் பறந்து வந்து வணங்கி நின்றது. நாராயணனும், நாரதரும் கருடன் மீதேறிப் புறப்பட்டனர். பூலோகத்தில் ஒரு பகுதிக்குப் போய்ச் சேர்ந்தனர். அங்கே ஒரு தடாகம் இருந்தது. அதன் கரையிலே போய், “நாரதா! நகரத்துக்குள்ளே பிறகு போவோம். இப்போது இந்த தடாகத்திலே காலைக் கடன்களை முடித்துக் கொள்’’ என்றார் பரமாத்மா. கிருஷ்ணபரமாத்வை அமர்த்திவிட்டு குளத்து நீரில் மூழ்கி நாராயண ஜபம் செய்துகொண்டே குளித்து எழுந்தார் நாரதர். கரையிலேயிருந்த நாராயணனைக் காணவில்லை. அதைவிட […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..!

பேராசிரியர் இரா.மதிவாணன் இயக்குனர், சிந்துவெளி எழுத்தாய்வு  நடுவம் கீழடி அகழ்வாராய்ச்சிகள், சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகள் ஆகியவை ஒரே இனம், ஒரே மொழி பேசிய திராவிட நாகரிகத்துக்கு உரியவை என அறிஞர்களால் நிறுவப்பட்டு வருகிறது. 1920-ல் சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷின் கண்டுபிடிப்புகளை போலவே 2014 முதல் நடைபெற்று வரும் வைகைச் சமவெளி கீழடி கண்டுபிடிப்புகளும் உலக அறிஞர்களின் பார்வையைக் கவர்ந்துள்ளன. ரோமிலா தாப்பர் என்னும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கீழடி கண்டுபிடிப்புகள் தமிழர் வரலாற்றில் புதிய திருப்பத்தை […]

மேலும்....

பெண்ணால் முடியும்! : கப்பலை இயக்கும் தமிழச்சி!

விண்வெளியில் பெண்கள் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டாலும் கரையைத் தாண்டி கடலுக்குள் செல்லப் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில பெண்களுக்கே அப்படியான மனத்தடை இருக்கிறது. உலக அளவில் இதுபோன்ற பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள் நிலவிவரும் சூழலில் சற்றும் மனம் தளராதவர் தன் முயற்சியால் சாதித்திருக்கிறார் ரேஷ்மா நிலோஃபர் நாகா. சென்னையில் பிறந்து வளர்ந்த ரேஷ்மா நிலோஃபார் நாகா, தற்போது கொல்கத்தாவில் உள்ள துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் கப்பலோட்டியாகப்  (Marine Pilot) பணியாற்றி வருகிறார். மருத்துவம், பொறியியல் தவிர்த்து வேறு ஏதாவது […]

மேலும்....

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க சிறப்புக் கட்டுரை : அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

சுகுணா திவாகர் தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு தொடங்குகிறது. 1920, மார்ச் 10-இல் வேலூரில் கனகசபை _- பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை!

நேயன் திரு.ஜெயகர் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கக்கூடிய ஒரு தீர்மானத்தை பம்பாய் சட்டசபையில் சமீபத்தில் கொண்டு வரப் போவதாகவும் அறிந்து மகிழ்கிறோம். அந்தத் தீர்மானத்திற்கு டாக்டர் அம்பேத்கர் போன்ற பிரமுகர்கள் உதவியாயிருந்து வேலை செய்வார்களெனவும் தெரிகிறது. இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்று சட்டமும் செய்யப்படுமேயானால், பெண்கள் சமூகத்திற்கு சாரதா சட்டம் எவ்வித பலத்தை அளிக்கின்றதோ அதே மாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில், இந்தச் சட்டமும் பெரிய பலமாக இருக்கும் என்பதற்கு அய்யமில்லை.                                                               (‘குடிஅரசு’ 22.12.1929) இதனால்தான் டாக்டர் […]

மேலும்....