எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (33) : அண்ணல் அம்பேத்கரை ஏற்றிப் போற்றி பெரியார் எழுதியவை!

நேயன் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிறந்த கல்விமான். இந்த இந்திய உபகண்டத்திலேயே சிறந்த ஆராய்ச்சிக்காரர். இவர் எழுதிய நூல்களுக்கு உலகெங்கிலும் செல்வாக்கு இருந்து வருகின்றது…. நம்மவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அம்பேத்கர் என்று பெயர் வைத்து நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். (‘விடுதலை’ 4.5.1963) இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆகட்டும், பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு ஆகட்டும். ஒரு நல்ல வாழ்வு ஏற்பட்டு இருக்கின்றது என்றால், காங்கிரஸினால்அல்ல. நமது இயக்கத் தொண்டும் அம்பேத்கர் செய்த தொண்டின் காரணமாகவுமே ஆகும். (‘விடுதலை’ […]

மேலும்....

கவிதை : தமிழினம் காக்கும் தூணாக நிற்போம்!

குற்றங்கள் இழைக்கின்ற கோட்சே கூட்டம்                 கொலைமிரட்டல் விடுக்கிறது; கூலிக்காக வெற்றுரைகள் பிதற்றிவரும் வீணர் கூட்டம்                 வீழ்ச்சியினைப் பரிசாகப் பெறுதல் திண்ணம்; குற்றுமியோ ஒருநாளும் அரிசி ஆகா!                 குரைக்கின்ற பேடியர்தம் போக்கை நல்லோர் நெற்பதராய்ப் புறந்தள்ளி ஒதுக்கி வைப்பர்;                 நிலைதாழ்ந்து விலைபோவோர் வெற்றி எய்தார்!   ஆரியத்தின் பிடரியினை உலுக்கி நாளும்                 ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் திமிரை வீழ்த்தி வீரியமாய்க் களத்தினிலே வெல்வோம்; வேண்டா                 வெங்கொடுமை சாய்ப்பதற்கே வினைகள் ஆற்றி நேரியநம் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(223) : சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ ஏட்டின் சிறப்பான வரலாற்றுப் பதிவு!

அய்யாவின் அடிச்சுவட்டில் ….   கி. வீரமணி 02.09.1986 அன்று சென்னை பெரியார் திடலில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றிய பின்,  இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை அறிந்திட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இணைந்து ‘கண்காணிப்புக் குழுக்கள்’ அமைத்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்பட்டு ஏறத்தாழ 120 ஆண்டுகள் ஆகின்றன. இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்கள். இது மகிழ்ச்சிக்குரிய நியமனம் ஆகும். இது […]

மேலும்....

பெண்ணால் முடியும் : சாதனைகள் புரியும் தாயும் மகளும்

இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ பயிற்சியாளர், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தவர், உலக அமைதி உள்ளிட்ட ஏராளமான விருதுகளுக்குச் சொந்தக்காரர். மரபு வழி மருத்துவம் பயின்றவர். இந்திய வான்படை பயிற்சியில் வானத்தில் குட்டிக்கரணம் போட்டு சாகசம் செய்து காட்டியவர். துப்பாக்கி சுடுவதில் வல்லவர், மலையேறுவதில் திறமைசாலி, தற்காப்புக் கலையில் ஆண்களோடு போட்டியிட்டு பட்டம் வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமையும் பெற்றவர் சீமாராவ். இவரது தந்தை டாக்டர் ராம்காந்த் சினாரி. கோவாவின் […]

மேலும்....

சிறுகதை : கல்விச் சுற்றுலா

ஆறு.கலைச் செல்வன் அபிநயா கூறியவுடன் எட்டாம் வகுப்பு மாணவி இனியா மிகுந்த உற்சாகத்துடன் கட்டுரை ஏட்டை எடுத்து எழுதத் தொடங்கினாள். தனியாகச் சென்று பார்க்க இயலாத இடங்களையெல்லாம் ஆசிரியைகள் உதவியுடன் தோழிகளுடன் சென்று கண்டு களித்து அவ்விடங்களின் சிறப்புகளை நன்கு அறிந்து கொள்ள கல்விச் சுற்றுலா உறுதுணை புரியும் என எழுதத் தொடங்கி கல்விச் சுற்றுலாவிற்கு ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியைகள் மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம் என எழுதி முடித்தாள். அவளது கட்டுரையைப் படித்துப் பார்த்த […]

மேலும்....