கூத்துக் கலை : ’வெங்காயம்’ திரைப்பட இயக்குநரின் ’நந்திக்கலம்பகம்!’

கி.தளபதிராஜ் பெரியார் கருத்துகளை உள்ளடக்கிய ‘வெங்காயம்’ திரைப்படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். மாற்று முயற்சியாக  ‘நந்திக்கலம்பகம்’  எனும் தெருக்கூத்து நிகழ்ச்சியை சென்னை தியாகராயர் அரங்கத்தில் 28.04.2019 அன்று அரங்கேற்றினார். பல்லவ மன்னன் நந்திவர்மனின் பூர்வீகம் கம்போடியா அல்ல.  காஞ்சிபுரமே அவனது பூர்வீகம்!  எனும் அறிமுகத்தோடு துவங்குகிறது கூத்து. இயக்குனர் ராஜ்குமார் நந்திவர்மன் வேடமேற்றிருந்தார். சின்ன வயதில் கோடைக்காலங்களில் தெருக்கூத்து பார்த்த அனுபவம் உண்டு. மேடை மேல் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு மைக் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும். ஒலிபெருக்கியே இல்லாவிட்டாலும் அந்தக் […]

மேலும்....

சிறுகதை : ’மதுரை மீனாட்சி’

  குறிப்பு : ( ‘வாலிபப் பெரியார்’ என்ற அடைமொழியுடன் போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி. ‘காந்தியார் சாந்தியடைய’ என்னும் நூலினை எழுதியமைக்காக சிறையில் அடைக்கப்பட்டார். தி.மு.க சார்பில் ஒற்றை மனிதராக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு திராவிடர் பெரியார் இயக்கவாதியாக, கம்பீரமாக குரல் கொடுத்தவர்.)   ஏ.வி.பி.ஆசைத்தம்பி (திராவிடர் இயக்க எழுத்தாளர்கள் ) மதுரைக் கல்லூரியிலே படித்தாள் கட்டழகி மீனாட்சி. வகுப்பிலே வெளியூர் மீனாட்சிகள் இரண்டு பேர் இருந்தனர். அதனாலேதான் ‘மதுரை மீனாட்சி’ என்று அவளுக்குப் பெயர் அமைந்துவிட்டது. காலையிலே கல்லூரிக்கு […]

மேலும்....

மருத்துவம் : செவ்வாழை

செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதுடன் ஆல்கலைன் நேச்சர் (Alkaline Nature) எனப்படும் காரத்தன்மை கொண்ட பழம் இவ்வாழைப் பழம். சிவப்பு நிறத்தில் இருப்பதால் ஆன்தோ சயானின்  (Antho Cyanin) என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்  (Anti Oxidant) நிறைந்தது. எனவே  ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பழமாக செவ்வாழைப் பழம் விளங்குகிறது. இப்பழத்தில் 4 சதவீதம் நார்ச்சத்து உள்ளதுடன், வைட்டமின் சி சத்தும் உள்ளது. செவ்வாழை சர்க்கரை சத்தை மெதுவாக வெளியேற்றும் தன்மை கொண்டதால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் பாதுகாக்கிறது. […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(226) : எழுத்தாளர் சிவசங்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்!

அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி  18.03.1987 அன்று பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் விடுதி திறப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. அப்போது பெண்ணின் அறிவு வளர வளர தன்னம்பிக்கை வளரும்; தன்னம்பிக்கை மலர்ந்தால் மூடநம்பிக்கை ஒழியும் எனக் கூறினேன். விழாவில் சிறப்புரையாக, விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சிவசங்கரி பேசுகையில், “முதன் முதலில் திரு.வீரமணி அவர்களும், நானும் 4 வருடங்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் பேட்டிக்காக சந்தித்தோம். கருத்து […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (36) : பெரியாரைப் போற்றிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள்!

நேயன் தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எதுவும் செய்யவில்லையென்று ஒரு சிலர் அக்காலத்திலிருந்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதால், தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தவற்றை இதுவரை ஆதாரங்களோடு விளக்கினோம். தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எந்த அளவிற்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு சூழல்களில் தந்தை பெரியாரைப் பாராட்டி, பெரியாருக்கு நன்றி தெரிவித்து கூறியுள்ளவற்றை தெரிந்துகொண்டாலே புரிந்து கொள்ளலாம். இதோ அவற்றுள் சில: டெல்லியில் இருந்து பம்பாய் சென்றார் பெரியார். தாராவியில் நடந்த […]

மேலும்....