திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை Dravidian Manifesto

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது திராவிடத் தத்துவம். உலகளாவிய சமநிலை மானுடம் மலர வேண்டும் என்ற குறிக்கோளோடு, ‘‘பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்’’ என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இது சுயமரியாதை – சமத்துவம் – சமதர்மம் என்னும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். மதம், ஜாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், திருமணம், குடும்பம், பொருளாதாரம் இவற்றின் தற்போதைய அடிக்கட்டுமானத்தை மாற்றி எல்லார்க்கும் எல்லாமுமான சமநிலையை உருவாக்குவதாகும். “ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது; […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை : வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள் – 3

ச.தீபிகா, தொல்லியல் ஆய்வாளர்   வட்டெழுத்துக் கல்வெட்டு வரலாற்றை அறிவதற்கு மிகவும் துணை நிற்பவை தொல்லியல் சான்றுகளே ஆகும். அத்தகைய தொல்லியல் சான்றுகளில் கல்வெட்டுகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். சங்ககால ‘தமிழி’ கல்வெட்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட பேரரசர்களின் கல்வெட்டு முறைகளை இக்கட்டுரையில் காணலாம். தமிழகத்தில் சங்க காலம் முடிவுற்ற பிறகு களப்பிரர்  ஆட்சிக் காலம் தொடங்கியது. சுமார் 300 ஆண்டுகளாக தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்த ஆட்சிக் காலத்தைப் பற்றியும், களப்பிர மன்னர்களைப் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (39) : மனிதனுக்கும் எருமைக்கும் பிள்ளை பிறக்குமா?

சிகரம் “தனு என்பவன் அரக்க மன்னனாவான். அவனுக்கு ரம்பன், கரம்பன் என்னும் இரண்டு புதல்வர்கள் இருந்தனர். அவ்விருவரும் பராக்கிரமமுள்ள மக்களைப் பெறுவதற்காகக் கடுந்தவம் புரிந்தனர். கரம்பன், பஞ்சநதம் எனும் நதியில் மூழ்கித் தவம் புரிந்தான். அந்நதிக் கரையைச் சுற்றிலும் அக்கினியை எழுப்பி, எவரும் நுழையாதவாறு பாதுகாப்புச் செய்துகொண்டான். அதன் நடுவில் இருந்துகொண்டு ரம்பன் தவம் புரிந்தான். இந்திரன் அவர்கள் தவத்தைக் கெடுக்க, முதலை உருக்கொண்டு அந்நதியில் இறங்கினான். கரம்பனின் தலையைப் பிடுங்கி அவனைக் கொன்றான். அதனை அறிந்த […]

மேலும்....

சிறுகதை : சொன்னதும் நடந்ததும்!

ஆறு.கலைச்செல்வன் “அப்பா, நாளைக்கு சிதம்பரத்திற்கு ரயிலில்தான் போகணும். நான் பார்த்த ஜோசியர்தான் நல்ல ஜோசியர். ‘ஜாதகரத்னா’ன்னு பட்டமெல்லாம் வாங்கியிருக்கார். அவர் சொல்றபடிதான் நாம செய்யணும்’’ தந்தை மகேந்திரனிடம் திட்டவட்டமாகக் கூறினான் மணிவண்ணன். “என்னைவிட நீ ஒண்ணும் அனுபவசாலி இல்லை. நான் பார்த்த ஜோசியர் மட்டும் என்ன சாமான்யமானவரா? ரொம்ப வருஷமா தொழில் செய்பவர். அவர் சொன்னா சரியாகவே இருக்கும். நாம நாளைக்கு பஸ்சில்தான் போகணும்’’ மகனைப் பார்த்து அப்பாவும் தீர்க்கமாகக் கூறினார். “அப்பா, ரயிலில் போனா சீக்கிரமா […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

நூல்    : கருஞ்சட்டைப் பெண்கள் ஆசிரியர்        : ஓவியா வெளியீடு     : கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87. விலை: 130. பக்கங்கள்: 176     “பொதுவாக அன்றைய கருஞ்சட்டைப் பெண்கள் அனைவருமே சமூகத்தின் அவமதிப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள்தான். ஆனால், எவரும் ஏற்றிராத பழியேற்று தியாகத்தீயில் தன்னையே எரித்துக்கொண்ட தலைவர் அன்னை மணியம்மையார். மணியம்மையார் அளவுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பலையை, வசவுச் சொற்களை, அபவாதத்தைச் சந்தித்த வேறு ஒரு பெண் தலைவர் திராவிடர் இயக்கத்தில் மட்டுமன்று, வேறு எந்த இயக்கத்திலாவது […]

மேலும்....