டில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை!

டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை ஏற்பாடு செய்த சிறப்புக்  கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்‘’ எனும் தலைப்பில் ஆழமானதொரு உரையினை ஆற்றினார். அன்று (23.11.1946) ‘சேலம் நகராட்சி கலைக் கல்லூரியில் தத்துவ விளக்கம்‘ எனும் தலைப்பில் தந்தை பெரியார் ஆழமானதொரு உரையாற்றினார். இன்று (4.2.2019) டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் “தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்‘’ எனும் தலைப்பில் பெரியார்தம் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் […]

மேலும்....

மாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி! அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை!

பசு மாட்டை ‘கோமாதா _ குலமாதா’ என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வணங்குவதுடன், பசு பாதுகாப்புக் குழு _ காவல் படை என்ற பெயரில் மற்றவர்களை _ குறிப்பாக தலித்துகளை _ முசுலீம்களைக் கொல்லும் நிகழ்வுகளும், குஜராத்திலும், உ.பி.யிலும், வடமாநிலங்களிலும் (பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்) இதற்குத் தனியே ஒரு அமைச்சகமும், அமைச்சர் எல்லாம்கூட ஏற்படுத்தி, கூத்தடிக்கின்றனர்!’’ எதிர்த்துப் போட்டியிடும் எதிர்கட்சிகள்கூட அதனையே தாங்கள் செய்வதாகக் காட்டி, வாக்கு வங்கி அரசியல் நடத்துவது அதைவிட _ பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்சைவிட […]

மேலும்....

அதனால்தான் அவர் பெரியார்! பெரியார் காமராசர் அரிய உரையாடல்!

பெரியார் அவர்களின் பிறந்த நாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற முதலமைச்சர் காமராசர் விரும்பினார். பல்வேறு பணிகள் காத்திருக்கும் நிலையில் முதலமைச்சர் அவற்றைத் தவிர்த்துவிட்டுத் தன்னை வந்து பார்ப்பதை பெரியார் விரும்பவில்லை. மறுத்துப் பார்த்தார். ஆனால், பெரியாரின் நெருங்கிய நண்பரான பி.வரதராசுலு நாயுடு அதை ஏற்காமல் முதலமைச்சர் காமராசரை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். மாலையில் காமராசரும், நாயுடுவும் ஒரே காரில் வந்து இறங்கினர். முதலமைச்சர் வருகிறார் எனினும் எந்த ஆரவாரமும் இல்லாமல் வந்தார் காமராசர். மிகுந்த மகிழ்ச்சியோடு […]

மேலும்....

கவிதை : பிள்ளையாரே, பேசுவீரா?

தும்பிக்கை முகத்தோரே! பானை போலே                 தொந்திமிகப் பருத்தோரே! நானுன் மேலே நம்பிக்கை மிகுந்தோனாய்க் கரங்கள் கூப்பி                 நயந்துமையே தலைவணங்கிப் பக்தி யோடு கும்பிட்டு வரம்கோரப் போவ தில்லை;                 குறும்புடனே சிலகேள்வி கேட்டு உம்மை வம்புக்கு இழுப்பதற்கே விரும்பு கின்றேன்                 வாய்திறந்தே சிலவார்த்தை பேசு வீரா?   தம்பிக்கே ஞானப்பழம் தன்னை அன்று                 தந்திடாமல் ஏமாற்றித் தானே தின்று வெம்பிப்போய்ச் சிறுவயதில் ஆண்டி யாகி                 வீற்றிருக்க வைத்தவர்நீர் மலையின் மீதே! […]

மேலும்....