சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)

நூல்             : பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள்  தமிழ்த் தேசியர்கள் ஆசிரியர்        : அ. மார்க்ஸ் வெளியீடு      : அடையாளம் பதிப்பகம்.    விலை          : 160. பக்கங்கள்: 175   சு.லட்சுமி நரசு, அப்பாதுரையார் முதலியோர் ‘சாக்கைய பவுத்தக் கழகம்’ என்கிற பெயரில் தொடராமல் ‘தென் இந்திய புத்தக் கழகம்’ என்கிற புதிய பெயரில் தொடர்ந்து இயங்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அயோத்திதாசரின் மறைவுக்குப் பிறகு ‘சாக்கைய பவுத்தக் கழகம்’ […]

மேலும்....

சிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை

 குப்பைத் தொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் வீதியோரத்தில் அந்த மாடி வீட்டுக்குக் கீழேதான் நான் நீண்ட நாட்களாக தவம் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தவம் எந்தக் கடவுளையும் வரவழைத்து அவர்களிடம் ஏதாவது அபூர்வமான வரங்கள் வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல! அகிலத்தைக் கட்டியாள வேண்டுமென்று அரசர்கள் பலர் தவமிருந்ததும், தன்னை அழிப்பார் யாருமிலர் என்ற நிலை ஏற்பட வேண்டுமென்று அசுரர்கள் கொடிய தவங்களை மேற்கொண்டதும்; சாபங்களின் மூலம் பகைவர்களைப் பழி வாங்குகிற வரங்களைப் பெறுவதற்கு முனிவர்கள் தவத்தில் முனைந்ததும் […]

மேலும்....

மருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்

இன்று உலகளவில் உடல் பருமன் உடல் நலத்தைக் கெடுக்கும் முக்கியமான ஒன்று. எனவே அதைத் தடுக்க வேண்டும். அதற்கு கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுவது கட்டாயம். *           நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தவும். *           அதிக உடல் கொழுப்பு உள்ள நபர்கள் சிறு தானியங்களை உணவாகக் கொள்ளலாம். *           காலை திரவமாக முதல் நாள் இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 200 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் நீரை மட்டும் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா ? (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக?

சிகரம்  விதேச நாட்டை ருக்மாங்கதன் ஆண்டு வந்தான். அவனது மனைவி சந்தியாவனி. மகன் தர்மாங்கதன். இவர்கள் சிறந்த விஷ்ணு பக்தர்கள். ஏகாதசி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்து வந்தனர். மேலும் மன்னன் இவ்விரதத்தின் மகிமையை மக்களுக்கும் எடுத்துக் கூறி அவர்கைளயும் அவ்வாறு செய்வித்தான். எட்டு வயது முதல் எண்பத்தைந்து வயதுக்குட்பட்ட ஆண் பெண் அனைவரும் அனுஷ்டிக்குமாறு மன்னன் ஆணை பிறப்பித்திருந்தான். தசமி அன்று ஒருவேளை அன்னம் உட்கொண்டு, ஏகாதசி அன்று உபவாசமிருந்து துவாதசி அன்று பகவானைப் பிரார்த்தித்து பாராயணம் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்! அண்ணல் அம்பேத்கர்

நேயன்  1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பம்பாய் சென்றார் பெரியார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாக்களுக்காக அவர் அழைக்கப்பட்டு இருந்தார். தாராவியில் 1.11.1970 மிகப் பெரிய பேரணி நடத்தப்பட்டது. பெரியாருடன் கி.வீரமணி, புலவர் தொல்காப்பியனார் ஆகியோர் திறந்த காரில் அமர்ந்து சென்றார்கள். மாதுங்கா என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. 100க்கு 97 பேர் கீழ் ஜாதி சூத்திரர்களாகவும் பறையர்களாகவும் இருக்க 100க்கு 3 பேர் பார்ப்பனராக பிராமணராக இருப்பதற்கு என்ன காரணம் […]

மேலும்....