திராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்

என்.வி.நடராசன் பிறப்பு: 12.06.1912 இந்தி எதிர்ப்பு உணர்வு இவரைத் திராவிட இயக்கத்தின்பால் ஈர்த்தது. இவரது இணையர் புவனேசுவரி அம்மையார் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் (என்.வி.என். சோமுதான், அந்தக் கைக்குழந்தை  பிற்காலத்தில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்) சிறைக்கோட்டம் சென்றவர். திராவிடன் என்னும் இதழை நடத்தி வந்தார். தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நாளும் உழைத்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை பல சென்றவர். […]

மேலும்....

நிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு

 தன் பெயரின் அடைமொழிக்கு ஏற்ப கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் பணியாக சிலப்பதிகாரத்தைப் பட்டிதொட்டியெல்லாம் அயராது அரும்பாடுபட்டு பரப்பி வந்தவர். 1975ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் பற்றி முழுமையான ஆய்வு நூலை எழுதி ‘சிலம்பொலி’ என்ற தலைப்பில் வெளியிட்டார். அதன் பின்னர் சிலம்பொலி செல்லப்பனாகிறார். அவருக்கும் பெரியார் இயக்கத்துக்குமான தொடர்பு நெடியது.  அவர் 6.4.2019 அன்று இறந்துபட்டார். அவருக்கு நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்ச்சி 16.5.2019 மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிலம்பொலி செல்லப்பனார் […]

மேலும்....

கலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்!

தமிழர் தலைவர் கி.வீரமணி கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய நேரத்தில், அதற்குத் தலைப்பு கொடுத்தது _ உங்களுக்கெல்லாம் நன்றாக நினைவில் இருக்கும் _ ‘‘நெஞ்சுக்கு நீதி’’ என்ற தலைப்பைக் கொடுத்தார். நீதியரசர்கள் மற்றவர்களுக்கு நீதி சொல்வார்கள்; வழக்கு என்று வரும்பொழுது நீதி சொல்வார்கள். ஆனால், கலைஞர் அவர்களைப் பொருத்தவரையில், அவர்களுடைய நெஞ்சுக்கு நீதி என்பது இருக்கிறதே, அது எப்படிப்பட்ட உணர்வோடு இருக்கக்கூடிய செய்தி என்பதை தெரிந்து கொள்ள சுருக்கமாக அவரையே பேச விடுவோம். திரைப்படங்கள், […]

மேலும்....

வாசகர் மடல்

17.05.2019 – மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பகுத்தறிவு வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் ‘உண்மை’ (மே 16 – 31, 2019) இதழ் படித்தேன். அரசே யாகம் நடத்துகின்ற அறியாமையை, அரசமைப்புச் சட்டத்தைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன், அதை ஆதாரத்துடன் கண்டித்திருப்பது கருத்துக்கு விருந்து! பிற கோள்களுக்கு, மனிதர்களை அனுப்ப ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த அறிவியல் காலத்தில் கணினி யுகத்தில், காலாவதியான கருத்துக்களுக்கு, அரசே புத்துயிரூட்ட முனைவது வெட்கக் கேடானது. மக்களின் வரிப்பணம் இப்படி வீண் […]

மேலும்....