பொங்கல் பரிசு

அறிஞர் அண்ணா மதிப்புமிகு முதலாளி அவர்களுக்கு, தங்களுக்குள்ள பலவிதமான வேலைத் தொந்தரவுகள், வியாபாரம் சம்பந்தமான வேலைகள், இவைகளுக்கிடையே இந்தக் கடிதம் எழுதி அனுப்புவதற்காக மன்னிக்கக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஏற்பட்டு விட்டிருக்கிற சிக்கலைப் போக்கிட வேறு வழியோ, துணையோ, இடமோ, இல்லாததால்தான் தங்களிடம் முறையிட்டுக் கொள்கிறேன். சென்ற மாதம் அலுவலகத்தின் செலவினத்தில் சிக்கனம் ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின்படி, வெளியூர்க் கடிதங்களையும், கணக்குகளையும் கவனித்து வந்தவரை நிறுத்திவிட்டு, அந்த வேலையையும் நானே பார்த்துக் கொள்ள வேண்டும் எனப் […]

மேலும்....

அருகம்புல் சாறு இதய நோயாளிகள் எச்சரிக்கை!

அருகம்புல்லுக்கு ‘ஹீமோஸ்டேடிக்’ என்ற ஒரு குணம் உண்டு. அதாவது ரத்தத்தை உறையச் செய்யும் குணம். அதனாலேயே அதிக ரத்தப் போக்கு உடைய பெண்களுக்கு அருகம்புல் ஜீஸ் குடித்தால் ரத்தப்போக்கு கட்டுப்படும்.இதய நோய் உள்ளவர்களுக்கு ‘பிளட் தின்னர்’ மருந்து கொடுப்பார்கள். அதாவது ரத்தம் ரத்தக் குழாய்களில் உறையாமல் இருப்பதற்கான மருந்து கொடுப்பார்கள். இதுபோன்ற மருந்தை எடுக்கும் வயதானவர்கள், உடம்புக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டு அருகம்புல் ஜீஸ் குடிக்க, அது இரத்தத்தை உறையச் செய்து உயிருக்கே ஆபத்தாய் முடியலாம்.அதனால் நல்லது […]

மேலும்....

சாதனை

இரு பெண்களின் இணையிலாப் புரட்சி! சபரிமலையில் சனாதனம் தகர்ப்பு சபரிமலையில் அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி மதவெறிக் கூட்டம் சபரி மலைக்குச் செல்லும் பெண்களைத் தடுப்பதையும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதையும் தொடர்ந்து கேரளாவில் செய்து வருகின்றனர். கோயிலுக்குள் செல்ல பெண்கள் முயற்சிக்கும்போதெல்லாம் அவர்களைத் தடுத்தும் தாக்கியும் விரட்டியும் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால், மதவெறிக் கூட்டத்தின் எதிர்ப்புக்கெல்லாம் அஞ்சாத இரு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்று […]

மேலும்....

முதல் திருநங்கை செவிலியர் மாணவி!

தமிழ்ச்செல்வி வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் இருக்கும் புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாகவே செவிலியர் படிப்புக்காக முயன்று கொண்டிருந்தார். கடந்த ஆண்டு பி.பார்ம் படிப்பதற்காக முயன்றார். அவர் திருநர் என்ற காரணத்தால் மெரிட் லிஸ்டில் இடம்பெறவில்லை. பின் தனியார் செவிலியர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். ஆறு மாதம் ஆன பிறகு, திருநராயிருக்கும் ஒருவர் செவிலியர் படிப்பை படிக்க முடியாது என்று கடிதம் வந்தது. கடிதத்துடன் ஒவ்வொரு அரசு அலுவலகமாக ஏறி இறங்கி போராடச் செய்தார். பின் இந்த […]

மேலும்....

கவிதை

திராவிடன் என்பதில் எத்தனை மகிழ்ச்சி! புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப் போர்த் திறத்தால் இயற்கை புனைந்த ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம் ஆரியன் அல்லேன் என்னும் போதில் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!’ (‘குடிஅரசு’ – 09.01.1938) என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், எப்படி வாழவேண்டும் எதை ஒழிக்க வேண்டும் என்பதை, ‘எல்லாரும் ஓர் குலம் எனப்படல் வேண்டும் எல்லாரும் இந்தியர் எனப்படல் வேண்டும் எல்லாரும் பொதுவாய் இன்புறல் வேண்டும் உயர்வு […]

மேலும்....