பொது வீதியில் நடக்கும் உரிமை

அமெரிக்காவில் தாகூரும், தென்னாப் பிரிக்காவில் காந்தியும் அவமதிக்கப்பட்டதால் இந்தியர்கள் கொந்தளித்து போர்க்குரல் எழுப்பிக் கொண்டிருந்தபோதுதான் இங்கே இந்த நாட்டில் பிறந்து இந்த நாட்டில் வாழ்ந்துவந்த மக்கள் தெருக்களில் நடக்க உரிமையற்றவர்களாய் இருந்தனர். அப்படி ஒரு நிகழ்வு கோவைக்கு அருகில் உள்ள குமரலிங்கம் என்னும் ஊரில் நடந்தது. இதனைக் கண்டித்து அன்றைய சட்டமன்ற உறுப்பினராய் இருந்த தோழர் வீரையன் சட்டமன்றத்தில் பேசினார். அரசு விநோதமான ஆணையை வெளியிட்டது. இதனை விளக்கியும் கண்டித்தும் தந்தை பெரியார் 07.03.1926 தேதியிட்ட ‘குடிஅரசு’ […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (8)

கண்ணப்பன் கண்மாற்று சிகிச்சையின் முன்னோடியா? திண்ணப்பன் என்றொரு வேடன். அவன் சிவன் மீது அளப்பரிய பக்தியுடையவன். அவன் வேட்டையாடிப் பெறும் எதையும் சிவனுக்குப் படையலிடுவான். அவ்வாறு செய்யும்முன் அவற்றை, தான் முதலில் சுவைத்துப் பார்த்து பிறகுதான் சிவனுக்குப் படைப்பான். இவனின் பக்தியைச் சோதிக்க கற்சிலையாய் இருந்த சிவபெருமான், தன் ஒரு கண்ணில் நீர்வடியச் செய்தார். அதைக் கண்ட திண்ணப்பன் கண்ணுக்குரிய பச்சிலைச் சாற்றை ஊற்றினான். ஆனாலும், சிலையின் கண் குணமாகவில்லை. எனவே, தன் கண்களில் ஒன்றைத் தோண்டியெடுத்து […]

மேலும்....

வாசகர் மடல்

                                               காலத்தால் அழியாத கல்வெட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், கேரள அரசு வரலாற்றுச் சாதனை, தமிழக அரசு தாமதிக்கலாமா? எனும் கட்டுரை ‘உண்மை’ மாத இதழில் (நவம்பர் 1-_15, 2017) வாசித்தேன். இந்திய வரலாற்றில் முதன்முறையாக (09.10.2017) தலித் சமுதாயத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணா என்ற […]

மேலும்....

மதவெறி மாய்த்து மனிதம் காப்போம்!

 மதத்தை ஏற்றிமனிதம் மாய்த்திடும்மதவெறி ஆட்சியில்நிதம்நிதம் வேதனை!மக்கள் பயன்பெறமதமே செய்ததென்?பயமே இன்றிப்பாதகம் செய்திடபயிற்றும் கூடமாய்மதங்கள் மாறின! சிலுவைப் போர்முதல்சிரியாப் போர்வரைஉலகில் நடந்தஉயிர்பலி போர்கள்மதத்தின் கொடையேமறுக்க முடியுமா? அய்யா வழியில்மதத்தை ஒழித்துமடமை தகர்த்துஜாதி ஒழித்துசமத்துவம் பேணிஅறிவில் உயர்ந்துஆற்றல் வளர்த்துமான வாழ்வைமகிழ்வாய் வாழ்வோம்! -வடபாதியான்                      

மேலும்....

அட அண்டப்புளுகே ஆகாசப்புளுகே!

சமூக வலைதளங்கள் அறிவியல் கண்டுபிடிப்பு. ஆனால், இந்த விஞ்ஞானக் கருவிகள் அழுக்கு மூட்டைகளின் அணிவகுப்பாக அஞ்ஞான சாக்கடையின் ஊற்றுக் கண்ணாக போய்விடலாமா?‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்ற பொருளில் செயல்படுகின்றனவா? ‘வாட்ஸ் அப்’ என்ற அறிவியல் கருவியில் சிதம்பரம் நடராஜர் கடவுள் பற்றி ஒரு கரடியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதில் ஒரு பகுதி இதோ: சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு: பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக […]

மேலும்....