மற்றொரு ‘சனியன்’“கார்த்திகைத் தீபம்”

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் பலதடவை எடுத்துக்காட்டிப்பேசியும், எழுதியும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப்பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூடநம்பிக்கையும் ஒழிந்த பாடில்லை. அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல, அடிக்கடி அவற்றின் புரட்டுக்களை வெளிப்படுத்தி வருவதனால் நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக்கொண்டு வருகிறோம். சென்றமாதத்தில் தான் […]

மேலும்....

‘தேசபக்தியை நிரூபிக்கும் இடம் திரையரங்கம் அல்ல’

“சினிமா தியேட்டர்களில், தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்காவிட்டால் அந்த நபருக்கு தேசப்பற்று குறைவென்று கருதமுடியாது;  தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தீர்ப்பில் கூறியுள்ளது. “மக்கள் பொழுதுபோக்கிற்காக சினிமா தியேட்டர்களுக்குச் செல்லுகிறார்கள்; தேசபக்தியை நிரூபிக்கும் இடம் அதுவல்ல. திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர் டி.சர்ட்டுகள், அரைக்கால் சட்டை அணிந்து வந்தால் அது தேசபக்திக்கு பங்கம் விளைவிக்கும் செயல் எனக் கருதி […]

மேலும்....

அகந்தை தொலைந்தது!

  தங்கதுரை வரவுக்காக பள்ளி வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆம்! அன்று பெரியநாடு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா. அதற்கு சிறப்புப் பேச்சாளராகத் தங்கதுரையை அழைத்தி ருந்தார்கள். தங்கதுரை சிறந்த பேச்சாளன், இளைஞன். எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்கும் வண்ணம் அவனது பேச்சு மிகத் தெளிவாக இருக்கும். ஆனால், அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் குறித்த நேரத்தில் எந்த விழாவிற்கும் செல்ல மாட்டான். மிகவும் அகந்தை பிடித்தவனாக இருந்தான். வேண்டுமென்றே நேரம் கழித்துச் […]

மேலும்....

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? – 11

சனாதனிகளின் சண்டித்தனம் இந்துச் சட்டத் திருத்த மசோதாவில் இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்கிறார்கள். முதலில் கருத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; பிறகு திருத்தங்களை ஏற்றுக் கொள்ளலாம்’’ என்றார் அம்பேத்கர். ஏற்கவே முடியாது, சட்டமே கூடாது. இருப்பது இருக்கிற மாதிரியிலேயே இருக்கட்டும் என்ற பிடிவாதமாகப் பார்ப்பனப் பண்டிட்கள் பேசினர்! போதாதற்கு வங்காளத்து முசுலிம் ஒருத்தரைப் பேச வைத்தனர்! ஆதரித்துப் பேசிவந்த பண்டிதர் நேரு, பிறகு பல்டி அடித்துவிட்டு, அம்பேத்கர் கருத்து ஏற்கப்படாத காரணத்தால்தானே இந்துத் திருத்தச் சட்ட மசோதா […]

மேலும்....

பலூன் வழி இணையத் தொடர்பு

சூறாவளியின் தாக்குதலால் செல்போன் கோபுரங்களும், தொலைத்தொடர்பு வசதியும் முறிந்துபோய் தகவல் தொடர்பு வசதி முற்றிலும் செயலிழந்து போனநிலையில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது முதல் நிவாரண உதவிகளை அளிப்பது வரை எல்லாவற்றிலும் சிக்கல் வரும். அத்தியாவசியப் பணிகளை உடனே ஒருங்கிணைக்கவும், பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும் அடிப்படை தொலைத்தொடர்பு வசதி உடனடி தேவை. எனவே, முன்னணி தேடுயந்திர நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘லூன்’ திட்டத்தின் சார்பில் இப்பணியைச் செய்ய பலூன்கள் பறக்கவிடப் […]

மேலும்....