ஒருவரும் அறியாது உதவும் மாண்பினர்!

      பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகள் என்னுள் தாக்கமானதற்குக் காரணம் சிதம்பரம் சு.ஊ.கூ பள்ளியின் தமிழாசிரியர் திரு.நாமு.மாணிக்கம் (செட்டியார்).   அவர்தான் பள்ளியில் இளங்கோ மன்றத்தைத் துவக்கியவர். வாரம்தோறும் ஒவ்வொரு பேச்சாளரை அழைத்து வருவார். அறிஞர் அண்ணாவிலிருந்து  டி.கே.சீனுவாசன் வரை அழைத்து வந்து பேச வைத்திருக்கிறார். அந்தத் தமிழாசிரியர் திரு.நாமு.மாணிக்கம் செட்டியார்தான் திரு.கி.வீரமணி அவர்களை சிறு வயதிலேயே கோடை விடுமுறையில் பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று மேசை மீது நிற்கவைத்து பேசச் சொல்வார்கள். அந்நாளில் கள்ளக்குறிச்சி, சிதம்பரம் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (9)

  ஆடை உருவ உருவ வளருமா?ஒரு சமயம் துர்வாசர் நீராடிக் கொண்டிருக்கையில் நீரின் வேகத்தால் அவரது ஆடை இழுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்த திரௌபதி தன் பட்டு உடையில் ஒரு பகுதியைக் கிழித்து நீரில் பிரவாகத்தில் விட அதனை அணிந்து துர்வாசர் கரையேறினார். தக்க சமயத்தில் உதவிய திரௌபதியைப் போற்றிப் புகழ்ந்தார். மேலும் அவளுக்கொரு இக்கட்டான நிலையில் அவள் மானம் காக்க வஸ்திரம் ஆயிரம் ஆயிரமாய் வளரும் என வரமளித்தார். (திரௌபதியின் வஸ்திராபரணத்தின் போது இந்த வரம் […]

மேலும்....

ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்களைப் பற்றிய எனது நினைவுகள்

பேரா. ஜி.ராஜூ M.A.. M.Sc., M.Ed., Ph.D.,பேராசிரியர் மற்றும் அறிவியல் துறைத் தலைவர், பிராந்தியக் கல்வி நிறுவனம்(தேசியக் கலாச்சார, கல்வி, ஆராய்ச்சி நிறுவனம்) ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்களும் நானும் கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தையையும், இரு மூத்த சகோதரர்களையும் நானறிவேன். பெரியார் கோட்பாடுகளின் தீவிரப் பற்றாளரான திரு. திராவிடமணி அவர்களால் கவர்ந்திழுக்கப்பட்ட டாக்டர் கி.வீரமணி, அவரது இளம் வயதிலேயே சிறந்த மேடைப் பேச்சாளராகப் பாராட்டப்பட்டவர். பேச்சுக் கலையில் தனக்கென ஒரு தனி பாணியை […]

மேலும்....

ஆசிரியரோடு பணியாற்றுவதை அரிய பெருமையாகக் கருதுகிறேன்

  பெரியாரின் சீடரான டாக்டர் கி.வீரமணி பெரியாரது கோட்பாடுகளைப் பற்றி பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல், சாக்ரடீசை பிளாட்டோ செய்தது போல பெரியார் அவர்களை ஓர் அமைப்பாக அதுவும் உலகளாவிய அமைப்பாக ஆக்கியவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தீர்ப்பாயத்தின் உறுப்பினராக, அறக்கட்டளை சார்ந்து நான் எழுதிய நியாயமான தீர்ப்பு அறக்கட்டளைக்கு வரிவிலக்குப் பெற்றுத் தந்தது. இதன்மூலம் என்னை பெரியார் கொள்கை ஆதரவாளராக மற்றவர்கள் நினைத்தது போலவே திராவிடர் கழகமும் நினைத்து, சந்தா கட்டாமலே விடுதலை நாளேட்டை எனக்கு அனுப்பி […]

மேலும்....

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

    ஆரியர் வேறு – திராவிடர் வேறு இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தை அணுகுவதை பாபாசாகேப் முழுமையாக நிராகரித்தார் என்று அவரை இந்துத்வா அம்பேத்கர் என்று காட்ட முயலுவோர் கூறுகின்றனர். ஆரிய_திராவிட என்கிற கண்ணோட்டத்தில் செய்யப்படும் அணுகுமுறையை அவர்கள் மனதில் கொண்டு கூறுகிறார்கள் எனக் கருதலாம். அப்படியாயின் அவரது அணுகுமுறைகள் சற்று மாறுதலுடன் இருந்தன என்று ஏற்கலாம். அவரது ஆய்வுகள் பெரும்பாலும், ஏன் முழுவதுமே, இந்து மதத்தின் நால் வருணமுறை, அய்ந்தாவதாகக் கற்பிக்கப்பட்ட தீண்டாதார் […]

மேலும்....