வாசகர் மடல்

உண்மை இதழில் வெளிவந்த “புத்தி வந்தது’’ என்ற சிறுகதை சிறப்பாக இருந்தது.இக்கதையின் ஆசிரியர், “சக்தி என்பது ஒவ்வொரு மனிதனிடமும் அமைந்துள்ளது இயற்கையே. அந்த மாபெரும் சக்தியின் மீது அறிவுக்கண்ணை செலுத்தி அந்தச் சக்தியை வெளிக்கொணர்ந்து செயல்பட்டால் விபரீதமான முடிவுகளிலிருந்து தன்னையும், நாட்டையும் காத்து நிற்க முடியும்’’ என மனவெழுச்சியை தட்டி எழுப்பியுள்ளார். ஆறு.கலைச்செல்வன் அவர்களுக்குப் பாராட்டுகள். இரா.திலகம்,9/12, நல்லம்பலபிள்ளை தெரு,பரங்கிப்பேட்டை. * * *நான் உண்மை இதழ் ஜூன் 16-_30, 2017 படித்தேன். அதில் நீதிக்கட்சி ஆட்சிக்கு […]

மேலும்....

இந்து முக்காலி

சகிப்பு என்னும் கொள்கை ஒரு சமுதாயம் எந்த அறக்கோட் பாட்டைப் பின்பற்றுகிறது என்பதைப் பொறுத்தது. இத்தகைய சமுதாயம்; நன்கு நிறுவப் பெற்ற சமூக அறத்தைப் பின்பற்றும் ஒரு சமுதாயம், தெளிவாக இது – செய்க, இது – செய்யற்க என்று கற்பிக்கப்பட்ட வேறு ஒரு சமுதாயத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள இதனால் இயலாது. வேறு அல்லது மாறுபட்ட கோட்பாடுகளை யுடையாரை ஏற்றுக்கோடல் கடினமான செயல்; (அவ்வாறிருப்பின் அது அசிரத்தையையே காட்டும் (மொ_-ர்_-1) ஒருவற்குச் சில கொள்கைகளில் கெட்டியான […]

மேலும்....

பொன்விழா காணும் “தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம்”

1967ஆம் ஆண்டின் (ஜூலை 18) தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன் அத்தியாயம்  பூத்த நறுமண நாள். முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் தீர்மானம் ஒன்றை சட்டப் பேரவையில் முன்மொழிந்தார். “மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அந்தப் பிராந்தியத்தைக் குறிக்கும்போது நமது மாநிலத்துக்கு மட்டும் “தமிழ்நாடு’’ அல்லது “தமிழகம்’’ என்ற பெயரில்லாமல் அதன் தலைநகரின் பெயரைக் குறித்தே வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இதை மாற்றித் தமிழர்கள் வாழும் இடம் என்பதைக் குறிக்கும் வகையில் “தமிழ்நாடு’’ என்று பெயரிடுவதற்குத் தமிழக அரசு முயற்சி செய்து […]

மேலும்....

உடல்நலம் காக்க உகந்த வழிகள்

உடல் எடையைக் குறைக்கும் பார்லி கஞ்சிநாளுக்கு நாள் அதிகமாக உடல் பருக்கிறதே என நீங்கள் எத்தனையோ உணவு மற்றும் உடற்பயிற்சி செய்து பார்த்திருப்பீர்கள். உடல் குறைவது போல் தோன்றினாலும், திரும்பவும் உடல் பருமனாகி விடும். வெறும் உடற்பயிற்சியும் டயட்டும் மட்டும் தீவிர கொழுப்பினைக் கரைக்க போதாது. வயிறு, இடுப்பு போன்ற பகுதிகளில் செயல்புரிந்து, அங்கேயிருக்கும் பிடிவாதமான கொழுப்பினை அகற்ற என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள். அப்படிப்பட்ட கொழுப்பினைக் கரைக்க உதவும் எளிய உணவு வகை என்ன தெரியுமா? […]

மேலும்....

ஆத்தூர் தீர்மானம் இருக்கிறது! மறவாதீர்!

13.02.1981 அன்று சைதை தேரடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். இந்தி ஆதிக்கத்தை வீழ்த்திட, கட்சி பேதமின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும். நீங்கள் எந்த அரசியல் கட்சியிலே இருந்தாலும் சரி. அரசியல் போட்டிகளை தேர்தல் நேரத்தில் வைத்துக் கொள்ளலாம். எந்தக் கட்சித் தமிழர்களாக இருந்தாலும் இன உணர்ச்சியோடு இருங்கள்! இன்றைக்கு பார்ப்பனர்கள் பகிரங்கமாக வெளியே வந்திருக்கிறார்கள்! 24.12.1980 தேதியிட்ட ஒரு மொட்டைக் கடிதத்தை நமக்குப் பார்ப்பனர்கள் எழுதியிருக்கிறார்கள். அது எந்தத் தேதியில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! […]

மேலும்....