ஜாதகம் பெண்களுக்குப் பாதகம்!

முப்பது வயதைக் கடந்தும் மண வாழ்க்கையில் நுழைய முடியாமல் தவிக்கும் பெண்கள் மிகுதியாக உள்ளனர். இவர்களுக்கு மண வாழ்க்கை அமையாமல் இருப்பதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், மிக முக்கியமான காரணம் ஜோதிடம். “பொருத்தம் சரியில்லை’’, “செவ்வாய் தோசம்’’, “நாக தோசம்’’ என்றெல்லாம் கூறி, ஜோதிடம் குறுக்கிடுவதால், அவர்களுக்கு அமைய வேண்டிய அருமையான வாய்ப்புகள் நழுவிப் போய்விடுகின்றன. மீண்டும் ஒரு வாய்ப்புக்கு அவர்கள் நீண்டகாலம் காத்திருக்க நேரிடுகிறது. ஜோதிடத்தின் மூலம் செவ்வாய் தோசம் என்பதும், பத்து பொருத்தங்கள் சரியாக […]

மேலும்....

ஜார்ஜ் வாஷிங்டனுக்கு சளி பிடித்தால்…

பொதுவாக நம் நாட்டில், நாம் உண்ணும் பல உணவுப் பொருட்கள் மருந்தாகவும் பயன்படுகிறது என்பது பலருக்குத் தெரியாது. அவை பாட்டிவைத்தியம் என்ற பெயரில் முடங்கிக் கிடக்கிறது. நாம் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் அன்றாடம் மருந்தாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சில பொருட்கள் இன்று உலக அளவில் ஆராயப்பட்டு அதில் உள்ள மருத்துவக் குணங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் சு.நரேந்திரன் தனது ‘நோயின்றி வாழ உணவே மருந்து’ என்ற நூலில் தெரிவிக்கிறார். மேலும் அவர் ஒரு சுவையான கருத்தினையும் அதில் […]

மேலும்....

இலவசமாக பி. டெக் படிக்க வாய்ப்பு! படித்ததும் வேலை!

இந்திய கடற்படையில் இணைந்து பி.டெக். படிக்க விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் வருகிற 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். படித்து முடித்ததும் இந்திய கடற்படையில் ரூ.72 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும். கேரளாவில் எழிமலாவில் உள்ள இந்தியன் நேவல் அகாதெமியில் பி.டெக். படித்து கடற்படையில் பணியில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் டு தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண் பெற்ற […]

மேலும்....

பி.ஜே.பி. ஆட்சியில் பெண்ணை எந்திரமாக்கி பிள்ளை உற்பத்தி பிஸ்னஸ்!

பல துறைகளில் பெண்கள் முன்னேறி வந்தாலும் ஆண் சமூகம் இன்னமும் பெண்களை ஒரு போதைப் பொருளாகவே பார்ப்பதும், தான் விரும்புகிறவர்களை விரும்பும் நேரத்திலெல்லாம் அடைந்துவிடத் துடிப்பதும் இதனால் ஏற்படுகின்ற வன்புணர்வு, கொலை போன்ற சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. லட்சமி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும், காளி என்றும் இன்னும் பலபல அம்மன்களையும் தெய்வங்களாக ஒரு பக்கம் வழிபட்டுக்கொண்டே மறுபக்கம் அவர்கள் பாப யோனியில் பிறந்தவர்கள் என்றும், அடிமைத் தனத்திலேயே உழல வேண்டியவர்களென்றும் அழுத்தி […]

மேலும்....

உள்ளுறுப்புகளுக்கான உணவு…

இந்த அண்டத்தில் உள்ள அசாதாரணமான அதிசயம்தான் மனித உயிரினம். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஒத்துப்போகும் குணாதிசயத்தைக் கொண்ட மனித உயிரினம். சில குறிப்பிட்ட நிலைகளில் தன்னைத் தானே ஆற்றிக் கொள்ளும். மனிதனின் ஒவ்வொரு உடல் உறுப்பும் எப்படி தன்னைத்தானே பழுது பார்த்துக் கொள்ளும்? அதற்கு நீங்கள்தான் அவற்றைக் கீழ்க்கண்டவாறு பாதுகாக்க வேண்டும். நுரையீரல்கள் புகைப்பிடிப்பதும், மாசுவும் உங்கள் நுரையீரல்களை பெருவாரியாக பாதிக்கும். புகைப்பிடிக்காமலும், உடற் பயிற்சியில் ஈடுபட்டும் வந்தால் உங்கள் நுரையீரலில் உள்ள சளி நீங்கி, அவை […]

மேலும்....