வெல்லப் பொங்கலில் விழிப்பு பெறுவோம்!
எடையைப் பெருக்காமல்ஏற்றதை உண்ணும்எளியவன் அறிவாளி! நூறாண்டு வாழ்வதற்கானஉணவுப் பட்டியல்…நாட்காட்டிக்கு அருகில்நாளும் தெரியுது! விரைவு உணவைவெறுத்து ஒதுக்கிமரபு உணவைமகிழ்ந்து உண்போம்! நொறுக்குத் தீனிசாவை அழைக்கும்குறுக்குத் தடம்! பசிக்கு உண்டவன்ருசிக்குத் தின்றபோதுபிணி தொற்றிக் கொண்டது!அலமாரிகளில் நிரம்பி இருக்கின்றமருந்துக் குப்பிகள்… மாத்திரைகள்…தூக்கி எறிவோம்! மதில் கட்டி அகழி வெட்டிமனிதனைக் காக்கும்மிளகும் தேனும்! புத்தாடையை போடுவோம்பொங்கல் நாளில்!பழையவற்றைப் போடாதேபோகித் தீயில்!பகுத்தறிவுத் தீயில் எரியட்டும்மனுவும் கீதையும்! மெல்லினம் வல்லினம்உயர்ந்தவர் தாழ்ந்தவர்சொல்லிய பேதம்கெல்லி எறிவோம்!சமத்துவம் பொங்கசமவுரிமை ஏந்துவோம்! கவிஞர் கண்ணிமை
மேலும்....