உதவிடுவோம்! மகிழ்ந்திடுவோம்!

குடங்குடமாய் பாலெடுத்துகுழவிக்கல்லுக்கு ஊத்துறீங்க!குடிக்கப்பாலு கிடைச்சிடாமகுடிசைப்பிஞ்சு அழுவுதுங்க! விதவிதமாய் படையலிட்டுவெறுங்கல்லுக்கு படைக்கிறீங்க!வெறும்வயித்த பிசைஞ்சிக்கிட்டுவெகுசனங்க துடிக்குதுங்க! மலர்கள்சூட்டி நகைகள்பூட்டிமாரியம்மன வணங்குறீங்க!மணமாகாத ஏழைக்கன்னிகள்மனசுவெடிச்சு தவிக்குதுங்க! வரியைப்போட்டு நிதியைச்சேர்த்துவகையாய்கோயில் கட்டுறீங்க!வசதியில்லை குடிசைக்கட்டவறியமக்கள் வாடுதுங்க! தேவையில்லா வேலையெல்லாம்தேடியோடி செய்யாதீங்க – இல்லாததேவலோகம் சொர்க்கலோகம்தேடினாலும் கிட்டாதுங்க! கடவுள்கடவுள்’னு சொல்லிக்கிட்டுகண்டதெல்லாம் பண்ணாதீங்க!கஷ்டப்படுற மக்களுக்குதவிகண்ணியமா வாழ்ந்துடுங்க! – தமிழோவியன், கடலூர் தீந்தமிழர் கண்விழிக்கப் பெரியார் வந்தார்! எத்துணையோ மதக்குரவர் இருந்தார் இங்கே    என்றாலும் தீண்டாமை ஒழிய வில்லை! எத்துணையோ கற்றவர்கள் வாழ்ந்தார் இங்கே    என்றாலும் அறியாமை நீங்க வில்லை! […]

மேலும்....

அனிதா மூட்டிய அறத்தீ! ஆதிக்கச் சக்திகளை அழிக்கும்! சமூக நீதியை மீட்கும்!

“அனிதா’’ -_ அனைவர் மனதிலும் அண்மையில் ஆழமாய்ப் பதிந்த பெயர். அனுதாபத்தாலல்ல, அளவு கடந்த பாசத்தால், அவர் செய்த தியாகத்தின் மீதான மதிப்பால்! தொடக்கப் பள்ளியில் அவர் பயின்ற காலந்தொட்டே மருத்துவர் ஆகவேண்டும் என்ற இலக்கை ஏக்கமாகவே கொண்டு, அதற்காகவே அவர் ஒவ்வொரு நாளும் அளவற்று உழைத்தார். மருத்துவர் ஆவதற்குரிய மதிப்பெண்களையும் பெற்றார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், தனக்குரிய இடஒதுக்கீடுகூட தேவையில்லாமல், பொதுப் போட்டியிலே மருத்துவராய் தேர்வு பெறும் அளவிற்கு 196.75 கட்ஆப் மதிப்பெண் பெற்று […]

மேலும்....

வாசகர் கருத்து

                                            கருத்துக் கருவூலம் உண்மை! காத்து வளப்பது நம் கடமை! கடை வீதிகளில் நாள்தோறும் எண்ணற்ற வார இதழ்கள், மாத இதழ்கள் கண்களைக் கவரும் வண்ணங்களில் தோரணங்களாய் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால், அவ்விதழ்களில் சமூக நலன் சார்ந்த கருத்துகளோ, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான நோக்கங்களோ உள்ளனவா என்பது கேள்விக்குறியே? ஏனெனில் அவைகள் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வணிக நோக்கோடு வெளிவருகின்ற இதழ்கள் ஆகும். இத்தகைய நிலையில் எவ்வித விளம்பரமும் லாபநோக்கமும் இன்றி […]

மேலும்....

பார்ப்பான் ஒர் அன்னியனே! பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து!

      பார்ப்பனர்களைப் பொறுத்த அளவில் இந்த நாட்டில் அன்னியர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத மக்களின் முட்டாள்தனமும் அறியாமையுமே பார்ப்பனர்களுக்கு தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ள போதுமானதாகி விட்டது. கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் அந்த மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி பயமுறுத்தி தங்கள் அடிமைகளாகவே பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள். இந்நிலை கண்டு கொதித்தெழுந்தவர்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும், அதனால்தான் இவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களின் மூடநம்பிக்கைகளைக் களையப் பாடுபட்டதோடு பார்ப்பனர்கள் அன்னியர்களே என்றும் நமக்கும் அவர்களுக்கும் […]

மேலும்....

பயிற்சி முகாம் தந்த பகுத்தறிவு!

      நல்லான் தன் வயலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். பயிரின் வளர்ச்சி அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதேநேரத்தில் பக்கத்து வயலுக்குரியவனான முகிலன் சற்று தாமதமாக வயல்வெளி நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் தமிழ்மணி, “என்ன நண்பா உன்னை வயல்பக்கம் பார்த்து பல நாள்கள் ஆகிவிட்டதுபோல’’ என்றான். “ஆமாம் தமிழ்மணி ஒரு வாரமாகிவிட்டது நான் வயல் பக்கம் வந்து. வெளியூர் போயிருந்தேன்.’’ தமிழ்மணி: எந்த ஊருக்கு, என்ன விஷயமாய்ப் போயிருந்தாய்? ஆளே சற்று வித்தியாசமாய்த் […]

மேலும்....