ஏழைகள் நிறைந்த இந்தியாவிற்கு ‘பின்லாந்து’ கல்விமுறையே தீர்வு!

மத்திய அரசு தம் கல்விக் கொள்கையை  மாற்றிக்கொள்ள வேண்டும்! பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக்கு 16 வயதுவரை (9ஆம் வகுப்புவரை) தேர்வு இல்லை! *  ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீ.கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி. என்ற சித்ரவதை அங்கே இல்லை. *  எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளைக்கு ஏட்டுக்கல்வி முதலில் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?

மூடக் கருத்துகளுக்கெல்லாம் முலாம் பூசுவதும், முட்டுக்கொடுத்து நிறுத்த முயல்வதும் இந்துத்வா பேர்வழிகள் எப்போதும் செய்யும் பித்தலாட்ட முயற்சியாகும். அறிவியலின் உச்சத்தை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கின்ற இக்காலத்தில்கூட அப்பட்டமான மூடநம்பிக்கைகளை அறிவியல் என்றும், இன்றைய அறிவியலுக்கு அவைதான் அடிப்படை என்றும் கூறிவருகின்றனர். “குளோனிங்’’ முறையில் ஆடு உருவாக்கப்பட்டு, கடவுள் இல்லை யென்று உலகுக்கு உணர்த்திய நிலையில், இந்தியாவில் உள்ள காவிக் கூட்டம் என்ன சொல்லிற்றுத் தெரியுமா?குளோனிங் முறைக்கு இந்து மதம்தான் அடிப்படை யென்றது. எப்படி என்பதற்கு, கௌரவர்கள் […]

மேலும்....

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

  முத்தாய்ப்பாக, “இந்து மதமே! உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு!’’ என்றே முழக்கம் இடுகிறார், அம்பேத்கர்! சமத்துவமின்மையே இந்து மதத்தின் ஆன்மா. சுருங்கச் சொல்வது என்றால் இந்துமதம் மனிதத் தன்மையற்றது. நன்னடத்தையற்றது. மனிதாபிமானமற்றது. இகழ்ச்சிக்குரியது. மதம் என்று கூறுவதற்கே தகுதியற்ற மதம் இந்துமதம். இதைவிடக் கடுமையாகச் சொல்ல முடியாது என்கிற அளவுக்கு அம்பேத்கர் இந்துமதம் பற்றிக் கூறியுள்ளார். (தொகுப்பு: நூல் பாகம் 6, பக்கம் 119) அவரை இந்துமதப் பாதுகாவலர், நண்பர், இந்துத்வவாதி என்றெல்லாம் கூறுவதென்றால் அவர்களது சிந்தனையில் […]

மேலும்....

உலகெங்கும் பெரியார்! உறுதி செய்த ஜெர்மன் மாநாடு!

உலகம் தழுவிய சிந்தனையாளர், உலக மக்கள் நலம் விரும்பிய மானுடப் பற்றாளர், உலக சமத்துவம் விரும்பிய சமதர்மவாதி பெரியார் என்பதால், அவரின் சிந்தனைகளை உலகம் வணங்கி ஏற்கும் என்பதை தொலைநோக்கோடு சிந்தித்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், பெரியாரின் “மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்று பல பத்தாண்டுகளுக்கு முன்னே முழங்கினார். அதன்படியே பெரியாரின் சிந்தனைகள், அமெரிக்கா முதற்கொண்டு பல நாடுகளிலும் பரவி அண்மையில் ஜெர்மனியில் மாபெரும் சுயமரியாதை மாநாடாக மலர்ந்தது. சுயமரியாதை மணம் பரப்பியது. ஜெர்மனி –_ […]

மேலும்....