கீழடி அகழாய்வு முழுமையாய், முனைப்பாய்,இடையறாது நடைபெறவேண்டும்.

    பிச்சை எடுத்து பிழைக்க வந்த ஆரியக் கூட்டம், நாங்கள்தான் இந்த மண்ணுக்கு உரியவர்கள், நாங்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல என்ற பச்சைப் பொய்யைக் கூறி, வரலாற்றையே மோசடியாய் திரிக்க முயன்றது. சிந்து சமவெளி அகழாய்வு அந்நிலையில், சிந்து சமவெளியில் நடத்தப்பட்ட அகழாய்வுகள், ஆரியர்கள் இந்தியாவிற்கு பிழைக்க வருவதற்கு முன்பே சிறந்த நாகரிக நகர வாழ்வை வாழ்ந்தவர்கள் தமிழர்கள் (திராவிடர்கள்) என்பதை உறுதி செய்தது. தோண்டத் தோண்ட தொன்மங்கள் தமிழர்க்குச் சாதகமாக வரவே, ஆய்வை முடக்கி, […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

      நூல்:     நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்            ஆசிரியர்:       ஆ.திருநீலகண்டன் வெளியீடு:   காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,  669, கே.பி.சாலை, நாகர்கோவில் – 629001.விலை: ரூ.175/-  பக்கங்கள்:150 ‘குடிஅரசு’ பார்வையில் நீடாமங்கல உண்மை! நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை ஜில்லா 3-ஆவது அரசியல் மாநாட்டில் ஆதி திராவிட தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர்களைத் துன்புறுத்தி மொட்டையடித்து சாணி ஊற்றிக்  கொடுமை செய்து தண்டித்த நடத்தையைப் […]

மேலும்....

தமிழகக் கல்வியை முடக்க தனிக் கவனம் செலுத்தும் பி.ஜே.பி. அரசு!

  பா.ஜ.க. அரசு தமிழகத்தில் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதிலேயே குறியாக உள்ளது என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு: நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக இந்தியா முழுமையும் கவனத்தில் எடுத்துக்கொண்டால் 25 சதவீத காலிப் பணியிடங்களே உள்ளன. தமிழகத்தில் மட்டும் இது 50 சதவீதம்  இருப்பதன் நிலையை […]

மேலும்....

அய்ரோப்பிய நாடுகள் – ஒரு பார்வை

ரைன் நதி “ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்அழகிய ரைன் நதி ஓரத்தில்மாலைப் பொழுதின் சாரத்தில்மயங்கித் திரிவோம் பறவைகள்போல்’’ என்ற பாடல் வரிகள் நடிகர்திலகம் நடித்த ‘சிவந்த மண்’ படத்தில் வரும். அப்போது பெரும்பான்மையான மக்கள் அதை நைல் நதி என்றே நினைத்துக் கொண்டார்கள். ஆனால் அப்பாடல் வரிகளில் வருவது எகிப்தின் நைல் நதி அல்ல. அய்ரோப்பாவின் ரைன் நதி ( (Rhein River) ஆகும். இந்த நதியானது சுவிஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகி ஆஸ்திரியா, ஜெர்மனி, […]

மேலும்....

கவிதை

      தடுப்போம்! வெல்வோம்! பெரியாரும், அண்ணாவும் பிறந்து வாழ்ந்த    பெருமைமிகு தமிழ்மண்ணில் தமிழர் நாமும்உரிமைகளை மீட்பதற்குக் களத்தில் நிற்போம்;    உப்புக்கல் வைரக்கல் ஆவ துண்டோ?நரியாரின் நவோதயா நீட்டாம் தேர்வு    நற்றமிழ்க்குப் பல்லாற்றான் அழிவைச் செய்யும்!புரியாத பேதையரின் மயக்கம் நீங்கப்    புரட்சிக்கு மனவாயில் திறந்து வைப்போம்! செவிடரென, குருடரென மாறிப் போனோர்    சிறுமையெலாம் அரங்கேற்றி மகிழு கின்றார்!தவிடுண்ணும் அரசனுக்கு முறம்பி டிக்கும்    தகுதியிலா அமைச்சரெனத் தாழ்ந்து போனார்;கவிதைக்கும் கருப்பொருளாய் ஆனார்; ஏனோ    கறைச்சேற்றைச் சந்தனமாய் எண்ணிக் […]

மேலும்....