திருப்பதியிலும் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகர் ஆக்கப்பட உள்ளனர்! தமிழக அரசே உடனே அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குக!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களும் அர்ச்சகர் ஆகும் வகையில் 200-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. விரைவில் 200 அர்ச்சகர்களை பணியிலமர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.   அனைத்து ஜாதியினரையும்  அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு திருப்பதி கோவிலில் பணி புரிய சுமார் 200 பேர்களுக்கு கோவில் விதிகள், மந்திரங்கள் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆவார்கள். தேவஸ்தான […]

மேலும்....

“சாமியார்கள் ஒழிந்த நாடு – ஜாதியில்லாத சமூகம்‘’ உருவாக்கப்பட வேண்டும்!

திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா என்ற  ஒருவன் வேலையற்றுத் திரிந்த இளைஞன். சாமியார் பிசினஸ்தான் முதலில்லா வியாபாரம் என்று புரிந்துகொண்டு, காவி வேடம் போட்டு, மிகப்பெரிய மடாதிபதி போல் தன்னைக் காட்டிக்கொண்டு பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து, தன்னுடன் ஒரு ரவுடிக் கும்பல், அடியாட்களை வைத்துக்கொண்டு தனது சாம்ராஜ்ஜியத்தை சல்லாப ராஜ்ஜிய மாக்கிக் கொண்டு, சொகுசு வாழ்வு வாழ்வதுபற்றி ஏடுகள் பல செய்திகளை வெளியிட்டன. நவீன மின்னணு சாமியார்கள்! குடும்பத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மூளைச்சாயம் ஏற்றி, அழைத்து […]

மேலும்....

குறும்படம்

Me & Mr. Unknown – எஸ்.எஸ்.தினேஷ்குமார், செல்பேசி: 97511 88805 காதல் திருமணம் செய்து எந்தவித ஆதரவுமின்றி, பரபரப்பான நகர வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள படம். பிரியாவும் அனுவும் அடுக்குமாடிக் குடியிருப்பில் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள். காதல் மணம் புரிந்த பிரியாவின் நட்புக் கிடைக்க, தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதுபோல அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்கின்றனர் சக்தி-_அனு தம்பதிகள். இந்த சூழ்ச்சியை அறியாத பிரியா, அனுமீது பரிதாபப்படுகிறாள். நட்பினால், அனைத்துக் குடும்பச் செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறாள். […]

மேலும்....

நூல் அறிமுகம்

  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் இடஒதுக்கீடு சட்டமாக உள்ளது தமிழ்நாட்டில்தான். ஒரு நீதிமன்ற தீர்ப்பால் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது,அதனை பாதுகாக்க 31சி பிரிவின் கீழ் ஒரு தனிச் சட்டத்தை உருவாக்கினார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியினரிடமும் ஒருமித்த கருத்தை உருவாக்கினார். அதனை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்து, அது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. மேலும் இச்சட்டத்தின் மீதான நீதிமன்றத்தின் தலையீடுகளைத் தவிர்க்க இதற்காக அரசமைப்புச் சட்டத்தில் […]

மேலும்....

மற்றவர் உணர்வுகளை மதிக்கும் மாண்புடையவர்!

                                             வழக்குரைஞர் கொ.சுப்ரமணியன் B.A., B.L. திராவிடர் கழகத்தின் தலைவர், ‘தமிழர் தலைவர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உலகத் தமிழர்களால் போற்றிப் பாதுகாக்கத்தக்க உன்னதத் தலைவர். எளிய குடும்பத்தில் பிறந்து தந்தை பெரியாரின் கொள்கைகளை 10 வயது முதலே ஏற்று, இன்றுவரை அதிலிருந்து அணுஅளவும் பிசகாது,  நேர்மை, நாணயம், சமூக அக்கறை, தமிழ், தமிழர் உணர்வு, ஆதிக்க ஒழிப்பு, மனிதநேயம் வளர்த்தல், மற்றவர்களை மதித்தல் அனைத்து உயர் பண்புகளையும் ஒருசேரப் பெற்று வாழ்பவர். நான் சென்னை சட்டக்கல்லூரியில் […]

மேலும்....