வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
கண்டம் இது வடசொல் என்கின்றனர் வட மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள். வடமொழி பற்றுள்ளவர்களும் அப்படி. இடைக்காலப் புலவர்களும் இதை வட சொல்லென்றே வைத்துச் செய்யுள் செய்தார்கள். இனிக் கண்டம் என்பதைக் கண்டோம் என்று உச்சரிப்பதுதான் நாகரிகம் என்று எண்ணி அவ்வாறு சொல்லுகின்றார்கள் சிலர் இந்தத் திக்கில்லாத தமிழகத்தில். கண் என்பதின் பொருள் என்ன? இதை அணுகி ஆராய்தல் வேண்டும். கண் என்பதன் பொருள் இடம் என்று சிலர் பொருள் சொல்லி விடுகிறார்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் மட்டும் போதாது. […]
மேலும்....