வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

மண்டலம் இதை மண் தலம் என்று மேற்படியார் பிரித்தது சரி. அதன் இறுதியாகிய தலம் என்பது ஸ்தலம் என்ற வடசொற் சிதைவு என்று கூறியது அடாதது. இடம் என்று பொருள் படும் தலை என்பது தொடர் மொழியின் இறுதிச் சொல்லாய் வரும்போது தலம் எனத் திரிந்து வரும். அவ்வாறு வந்ததே மண்டலம் என்பது. எனவே, தலம் தூய தமிழ்க் காரணச் சொல்லேயாகும்.(குயில்: குரல்: 3, இசை: 9, 16-8-1960) தானம் பாடினான் என்பதில் உள்ள தானம் வடசொல் […]

மேலும்....

கோவை கல்லூரி மாணவர்கள் படைத்த கார் நாற்பதே காசில் ஒரு கிலோமீட்டர்!

கோவை மாநகரில் பொறியியல் மாணவர்கள் சந்தோஷ், விவேக், வினோத், சிவப்பிரகாஷ் போன்றோரின் கூட்டு முயற்சியால் பெட்ரோல், டீசல் வாகனத்துக்கு மாற்றாக மின்சாரக் கார் ஒன்றைத்  தயாரித்துள்ளனர். இந்த மின்சாரக் காரை ஒரு கிலோ மீட்டர் தூரம் இயக்க 40 காசு மட்டுமே செலவாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். “நானோ காரை முன்மாதிரியாக வைத்து மின்சார வாகனத்தை தயாரிக்க முடிவு செய்தோம். ரூ.28 ஆயிரம் கொடுத்து பழைய நானோ கார் ஒன்றை வாங்கினோம். அதன் எடையைக் குறைத்தோம். எஞ்சின், […]

மேலும்....

தமிழர்களுக்குப் புதுவாழ்வு தந்தவர்

கலைஞர் அவர்கள் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிக்காரர்-களைவிட பகுத்தறிவாளராவர். அவருக்குப் பிறந்த நாள் மலர் வெளியிடுவது அவரது கொள்கை-களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகும். மனிதர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது நம்பிக்கையாளர்கள் பகுத்தறிவாளர்கள் என்பதாகும். முன்னோர்கள் சொன்னது பழைய காலம் முதல் இருந்து வருவது என்பதற்காக எதையும் சிந்திக்காமல் கடவுள் _ மதம் _ ஜாதி _ சாஸ்திரம் என்கிற பெயரால் பல மடைமைகளைச் சிந்திக்காமல் ஏற்றுக் […]

மேலும்....

மருத்துவப் படிப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு: உயர்நீதிமன்றம் ஆணை

ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வகாஜூதின் அன்சாரி (வயது 24). இவர் கடந்த 2012_ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பிற்காக மராட்டியத்தில் உள்ள 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்-பித்திருந்தார். உரிய தகுதி இருந்தும் வகாஜூதின் அன்சாரிக்கு கல்லூரியில் இடம் கிடைக்க-வில்லை. ஆனால் இவரை விடக் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் முறை கேட்டாலும், மாநில அரசின் அலட்சியத்தாலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறாமல் போய்விட்டது […]

மேலும்....

செய்யக் கூடாதவை

அறிவையும் ஆற்றலையும் முடக்கக் கூடாது கற்றவன் என்பவன் கல்லாத சிலருக்குக் கற்பிக்க வேண்டும்; சிந்தனையாளன் என்பவன் பலரைச் சிந்திக்கச் செய்ய வேண்டும்; பேச்சாற்றல் உள்ளவன் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்; அறிவாளி என்பவன் மற்றவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். அனாதையாய்ப் பிறந்தவர்கள் ஆயிரம் அனாதைகளை முயன்று காக்கும்போது, கல்லாதவர்கள், மற்றவர்கள் கற்க தன் வாழ்வையே அர்ப்பணிக்கும்போது, ஏழையாய் இருப்பவர்கள் எத்தனையோ பேருக்கு உதவும்போது, வசதி, வாய்ப்பு, அறிவு, படிப்பு உள்ளவர்கள் அதைப் பிறருக்குப் பயன்படுத்தாமல் இருந்தால் அது ஒருவகை […]

மேலும்....