Category: ஜூன் 01-15
சிந்திககத் தவறும் மந்தை மனிதர்கள்! ஒரு சுவையான நிகழ்வு!
‘ஹம்பி நகரம்’ கிருஷ்ணதேவராயருடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி.1509 _ 1529) செல்வச் செழிப்பில் மிந்தது. அவருடைய ஆட்சியில் ராணுவம் பலம் வாய்ந்ததாக இருந்தது. கி.பி.1522ஆம் ஆண்டு, விஜயநகரத்திற்கு விஜயம் செய்த போர்ச்சுக்கல் நாட்டுப்பயணி டொமின்கோ பேயஸ் இதனைப் பதிவு செய்திருக்கிறார். கிருஷ்ணதேவராயர் படையில் ஒன்றரை லட்சம் படை வீரர்கள் இருந்ததாகக் கூறுகிறார்.இதே, ஹம்பி நகரில், கிருஷ்ணதேவரா-யருடைய ஆட்சிக் காலத்தில் அரசவையில் நடந்த ஒரு ஆய்வு வேடிக்கையானது; சிந்தனைக்குரியது. மன்னர் கிருஷ்ணதேவராயர் மக்களின் பழக்கவழக்கங் களையும், நம்பிக்கைகளையும் கூர்ந்து […]
மேலும்....உலகிற்குச் சோறிடும் விவசாயிகள் தற்கொலை! பா.ஜ.க. அரசின் பாராமுகம்!
பத்து லட்சம் ரூபாயில் சூட்டும் கோட்டும் அணிந்து ஆண்டு முழுவதும் அயல்நாடு-களிலேயே பவனிவரும் இந்தியப் பிரதமர் மோடியின் ஆட்சியில் 2015ஆம் ஆண்டில் மட்டும் 12,602 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்னும் கொடுமையான செய்தி எந்தக் கல்நெஞ்சினையும் கரைத்து விடுமன்றோ! இது 2015இல் மட்டுமே நிகழ்ந்ததல்ல. 2014லும் இதே அளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆக இந்த அரசு பொறுப்பேற்றது முதல் 2014, 2015ஆம் ஆண்டுகளில் மொத்தம் 25,000 விவசாயிகள் (அதாவது ரு லட்சம்) தற்கொலை […]
மேலும்....இந்தியாவில் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை
இந்தியாவில் முதன்முதலாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை பூனேவில் உள்ள கேலக்சி கேர் லாப்ராஸ்கோபிக் இன்ஸ்டிடுயுட்டில் செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை சோலாப்பூரைச் சேர்ந்த 21 வயது பெண்மணிக்குச் செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்படாமையால் இதைச் செய்வதற்கு அரசின் அனுமதி பெற வேண்டியிருந்தது. மகாராஷ்டிர மாநில சுகாதார இயக்ககம் இதற்கான அனுமதியை மிகுந்த காலதாமத்திற்குப் பின் 17.5.2017இல்தான் வழங்கியது. உடனே 18.5.2017இல் மருத்துவர்கள் இதைச் செய்துள்ளனர். இதைச் செய்வதற்குமுன் அப்பெண்ணின் இயல்பாக இயங்கிக் […]
மேலும்....”இந்துமதம் இருக்கும்வரை இந்நாட்டில் கம்யூனிசம் வராது!”
08.11.1980 அன்று, தமிழகத்தின் அனைத்து பகுத்தறிவாளர் கழகங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. எல்லா மாவட்டங்களிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தனர். கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அனை-வரையும் வரவேற்றுப் பேசினார். நான் தலைமை உரையில், “அறியாமை நிறைந்த நம் மக்களிடையே சமுதாயப் பணி செய்வது என்பதுதான் மிகவும் கடினமான காரியம் ஆகும். நாம் எத்தனையோ சோதனைகளை ஏற்றாக வேண்டும். குறிப்பாக அரசு அலுவலர்களுக்கு ஆயிரம் சோதனைகள் வரும், அதை ஏற்றுக் கொண்டுதான் நாம் பணியாற்ற […]
மேலும்....