கடற்கறைக் கைப்பந்துப் போட்டி மீனவச் சிறுவன் சாதனை!

ராபின் என்னும் 11ஆம் வகுப்புப் பயிலும் மாணவன் சீர்காழிக்குப் பக்கத்தில் பழையார் என்னும் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரவியின் மகன். ரவி ஓர் எளிய மீனவர். ராபின் அவரது பள்ளியில் கடந்த மூன்றாண்டுகளாக கைப்பந்து விளையாடி வந்தார். சிலர் கடற்கரைக் கைப்பந்து விளையாட்டைப் பற்றிக் கூறியபோது அதை மேற்கொள்ள முயன்றார். அந்த முயற்சியைப் பற்றி அவர் கூறும்போது, “ஆரம்பத்தில் மணலில் விளையாடுவது மிகக் கடினமாக இருந்தது. அதற்கு மிகவும் ஆற்றலும், சக்தியும் தேவைப்பட்டது. ஆனால், தற்போது பழக்கப்பட்டுவிட்டது. […]

மேலும்....

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

“பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள இந்து சமூக சித்தாந்தத்தை நான் நிராகரிக்கிறேன்’’ என்று 3.10.1954இல் அகில இந்திய வானொலியில் பேசினார். அப்படியிருக்க, அவர் வாழ்ந்தபோது மட்டுமல்ல. இறந்தபோதும் இந்துவாகவே இருந்தார் என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய திரிபுவாதம்? ஆங்கிலேயர் காலத்திலிருந்து சட்டம் தரும் விளக்கம் ‘இந்து’ என்பதற்கு என்னவென்றால், யூத, கிறித்துவ, இசுலாமிய, பார்சி மதங்களைத் தவிர மற்றைய மதங்கள் அனைத்தும் என்று பொருள்படும். அத்தகைய இந்து சட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் சில திருத்தங்களைத் தந்தார். பிறகு அது […]

மேலும்....

பெரும்பான்மை மக்களின் வேலைவாய்ப்புகளை விழுங்கும் சிறுபான்மை பார்ப்பனர்கள்!

“தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருந்தாலும், தற்போது அரசியல், வேலைவாய்ப்புகளில் பார்ப்பனர்கள் அதிகம் இல்லை’’ என்ற பத்திரி சேஷாத்திரிகளின் புலம்பல் ஒரு பக்கம். 4 சதவீதம் உள்ள நாங்கள் 60 சதவீத பதவிகளை அனுபவித்து வருகிறோம் என்று இணையத்தில் ஒரு பார்ப்பனரின் திமிர் மிகுந்த பதிவு மறுபக்கம். எத்தனைக் காலத்திற்கு இடஒதுக்கீடு? இனி இடஒதுக்கீடே வேண்டாம் என்று சில அரைவேக்காடுகளின் கோரிக்கை இன்னொரு பக்கம். மத்தியில் மதவாத பா.ஜ.க. ஆட்சி பெரும்பான்மையுடன் அமைந்தது முதல் ஒடுக்கப்பட்ட […]

மேலும்....

அடே குட்டிச் சுவரே! இன்னமுமா சாமி விளையாட்டு?

  நமது  சின்னஞ்சிறு குழந்தைகள் சாமி வைத்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். சிறு கற்களை இரண்டு வரிசையாக அடுக்கி அதன் மேல் குச்சிகளைப் பரப்பி, அதற்குமேல் துணி, இலை, காகிதம் முதலியவைகளைப் போட்டு மூடி, ஓர் அறை மாதிரியாகச் செய்வார்கள். அதன் பிறகு சிறு ஓடுகளை முக்கோணமாகத் தேய்த்தோ அல்லது பொம்மைகளையோ அவ்வறைகளுக்குள் சாமி களாக வைத்து ஒரு குழந்தை அர்ச்சகராகவும், மற்ற குழந்தைகள் பக்தர்களாகவும் நடிப்பதுண்டு. இதுதான் குழந்தைகளினுடைய கோயில்கள். இவைகளுக்குத் திருவிழாக்களும் உண்டு. சிறு காய்களில் […]

மேலும்....

மூவலூர் இராமாமிர்தம் அம்மைய்யார்

தேவதாசி முறை ஒழிப்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்! திருவாரூருக்கு அருகில் பாலூரில் 1883ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி _ சின்னம்மாளின் மகளாகப் பிறந்தார். கிருஷ்ணசாமி மனவேதனை-யில் வீட்டை விட்டுச் சென்றுவிட, வறுமையில் வாடிய சின்னம்மாள் குழந்தையை (இராமாமிர்தத்தை) 10 ரூபாய் பணத்துக்கும் ஒரு பழைய புடவைக்கும் தாசிலகுல பெண்ணிடம் விற்றுவிட்டார். அப்போது இராமாமிர்தத்திற்கு வயது 5. இவருக்கு 7 வயதானதும் தாசித் தொழிலில் ஈடுபடுத்த சடங்கு செய்தனர். மூவலூரில் உள்ள திண்ணைப் பள்ளியில் படித்தார், கூடவே சுயம்பு பிள்ளையிடம் […]

மேலும்....