தமிழில் வழிபாடு செய்தால் கடவுள் தீட்டாகுமாம்!

05.12.1980 அன்று இரவு மலேசிய துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ பத்மனாபன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் உரையாற்றினேன். அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிற _ முறைப்படுத்தி வருகிற நமது சகோதர இயக்கமான மலேசிய திராவிடர் கழகத்தினர் ஒரு கட்டிடத்தை கழகத்திற்காக வாங்குவது என முடிவெடுத்தார்கள். அந்த நேரத்திலே நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்தக் கட்டிடத்தை வாங்குவதற்கென ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்; உதவியிருக்கிறார்கள். தந்தை பெரியாருடைய நூற்றாண்டு விழாவினை […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

  படித்தல் கற்றல் என்ற பொருளில் படி என்ற சொல் பண்டைத் தமிழ் நூல்களில் காண வியலாது என்றும், பட் என்ற வடமொழித் தாதுவின் அடியாகப் பிறந்ததே இச்சொல் என்றும் (இலக்கணச் சிந்தனைகள்) என்ற நூலின் 101ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார் திரு.எஸ். வையாபுரி பிள்ளையவர்கள். அன்பு சார்ந்து விளக்குக என்று அ. கணபதி (திருமதிக் குன்றம்) நமக்கு எழுதியுள்ளார்.பண்டைத் தமிழ் நூற்களில் படித்தல் என்ற சொல் காணப்படாவிடில் அதன் பிற்காலத்தில் படித்தல் என்ற சொல் ஏற்பட்டிராதா? பண்டைக்காலம் […]

மேலும்....

செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பால் சீரழிந்த பொருளாதாரம்

    2014ஆம் ஆண்டில் அனைத்து ஊடகங்-களின் ஒட்டுமொத்த கவர்ச்சிப் பிரச்சார உத்திகளால் கட்டப்பட்ட ஒரு மாயத் தோற்றத்தின் கதாநாயகனான மோடி பிரதமராக பதவியேற்றது முதல் கொண்டுவந்த திட்டங்களில் மிக உன்னதமான திட்டமாக பிரச்சாரம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதே நடைமுறையில் மிகவும் மோசமான திட்டம் என்பது பல நிலைகளில் மெய்ப்பிக்கப்-பட்டுள்ளது. இத்திட்டம் கொண்டு வந்ததற்கான காரணங்களாகக் கூறப்பட்டவை: 1.    கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருதல். அதன்மூலம் அந்தப் பணத்துக்கு அபராதம் வசூலிப்பதன் […]

மேலும்....

செய்யக் கூடாதவை

போதும் என்பதால் சாதிக்காமல் இருக்கக் கூடாது சிலருக்குப் பல்துறை அறிவும் ஆற்றலும், நுட்பமும், சாதிக்கும் திறனும் இருக்கும். ஆனால் அவர்கள், இருப்பது போதும். இதைக் கொண்டு, நிறைவாக, நிம்மதியாக, மகிழ்வாக, சிக்கலின்றி வாழ்ந்துவிடுவோம் என்று வீட்டிற்குள் முடங்கிவிடுவர். ஆண்களேயன்றி பெண்களும் திருமண-மானவுடன் வீட்டில் ஒடுங்கி விடுகின்றனர். அவர்கள் படித்த உயர்கல்வி, அவருக்குள்ள ஆற்றல், கூர்மை, சாதனைத் திறன் எல்லாம், அடுப்பிலும், அலங்காரத்திலும் அடங்கி ஒடுங்கிவிடுகிறது. ஒருவரை அல்லது சிலரைத் தலைமைக்குத் தயார் செய்து வரவேண்டும். அப்போதுதான் அமைப்போ, […]

மேலும்....

புத்திவந்தது

“ஜெய் அனுமன்’’, “ஜெய் அனுமன்’’ வீட்டு வாசலிலிருந்து வந்த வித்தியாசமான குரலைக் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான் கோமகன். அவனது நண்பன் புகழேந்திதான் கோமகன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தான். “என்னடா புகழேந்தி, என்ன ஆயிற்று உனக்கு? திடீரென ஏதோ பிதற்றிக்கொண்டு வர்ரீயே!’’ நண்பனைக் கேட்டான் கோமகன். “நண்பா, உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்ற திருமூலர் கூற்றை படித்திருக்கிறாயா?’’ என வினவினான் புகழேந்தி. “ஆமாம். படிச்சிருக்கேன். நமக்குத்தான் நல்லா தெரியுமே.’’ “நான் உடலை வளர்க்கப் போறேன்’’ “ஆனால், […]

மேலும்....