பிற்பட்டோருக்கு லாபம் பார்ப்பனர்க்கோ கோபம்!

அய்யாவின் அடிச்சுவட்டில்…. இயக்க வரலாறான தன்வரலாறு (171) பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டினை தமிழக அரசு, குறிப்பாக தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள் என்றவுடன் பார்ப்பனக் காகிதப் புலிகள் ஆத்திரத்துடன் உறும ஆரம்பித்து விட்டன! 28.01.1980 அன்று விடுதலையில், “பார்ப்பனக் காகிதப் புலிகளின் பாய்ச்சல்’’ என்ற தலைப்பில் தலையங்கத்தை இரண்டு பகுதிகளாக விளக்கியிருந்தேன். பார்ப்பனக் காகிதப் புலிகளான ‘இந்து’, ‘மெயில்’ ஏடுகள் எப்படி 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற்றது […]

மேலும்....

டிஎன்பிஎஸ்சி தேர்வு : புதிய விதிமுறைகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு களை எழுதுபவர்களுக்காக திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: ஆண் விண்ணப்பதாரார், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் பெண்ணாக இருப்பின், ஏற்கெனவே மனைவியுடன் வாழும் ஒருவரைத் திருமணம் செய்தவராக இருக்கக் கூடாது. விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், […]

மேலும்....

பெண்ணால் முடியும் : மதுவுக்கு எதிராய் மனம் தளராது போராடும் பெண்

இன்றைய பெண்களுக்கு எழுச்சியூட்டும் சமூகப் போராளி நந்தினி. இவர் குடும்பமே மதுவுக்கு எதிராய் போராடி வருகிறது. இவர் 63 முறையும், இவரது தந்தை 67 முறையும், தங்கை 3 முறையும் மதுவுக்கு எதிராய் போராடி சிறை சென்றுள்ளனர். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே மேடையேறிப் பேசிய நந்தினி தன் தந்தையையும் புரட்சியாளர் பகத்சிங்கையும் முன்மாதிரியாகக் கொண்டு போராடும் இவர் தன் போராட்டம் பற்றிக் கூறியபோது, “என் போராட்ட குணம் என் அப்பாவிடம் இருந்து வந்தது. கறுப்பு பணம், ஊழல் […]

மேலும்....

இளைஞர்களின் எழுச்சிப் போர் இன,மாநில உரிமைகள் மீட்கவே!

– மஞ்சை வசந்தன் தமிழரும் தமிழும் தரணி முழுக்க வழங்கிய கொடைகள் ஏராளம். உலகில் மற்றவர்களெல்லாம், மொழியின்றி, விழிப்பின்றி, நாகரிக, பண்பாட்டு செழிப்பின்றி வாழ்ந்த காலத்திலே, வளமான மொழியையும், கூர்மையான அறிவு, கலை, இலக்கியம், மருத்துவம் என்று பல்துறை வளர்ச்சியும் பெற்று இயற்கையோடு இயைந்த பகுத்தறிவு வாழ்வு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் மட்டும் தன்னை ஒடுக்கிக் கொள்ளாது உலகின் பலப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்து, தங்கள் நாகரிகத்தை, பண்பாட்டைப் பின்பற்றினர். அவற்றின் எச்சப்பாடுகளை […]

மேலும்....

அறிவைச் சொல்லிக் கொடுக்கும் கல்வி முறையே நமக்குத் தேவை

 – தந்தை பெரியார் தலைவர் அவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு தகுதி இல்லை என்று குறிப்பிட்டார்கள். இதற்குத் தனித் தகுதி ஒன்றும் தேவையில்லை. கூட்டத்தில் ஒழுங்கு முறை தவறாமல் அடக்கி ஆள வேண்டும். அது தவிர,  தலைமை தாங்க தகுதி தேவை இல்லை. தலைவர் அவர்கள் நல்ல ஆராய்ச்சிக் கருத்துகளை எடுத்துரைத்தார்கள். முதலில் நீங்கள் பகுத்தறிவாளர் கழகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் சாமி இல்லாதவன் என்பார்கள். பகுத்தறிவாளர்களில் ஒரு பகுதியினருக்குத்தான் கடவுள் […]

மேலும்....