இளைஞர் எழுச்சி இன உரிமை மீட்கும்!
மாணவர்கள் தந்தது மெரினா புரட்சி! மக்களும் சேர்ந்ததால் மாபெரும் எழுச்சி! காண இயலாத கட்டுப்பாட்டு மாட்சி! கண்ணிய போருக்கு கண்கண்ட சாட்சி! சல்லிக்கட்டு தமிழர்மரபு டில்லிக்கட்டு தடுப்பது எதற்கு? சொல்லிச் சொல்லி சோர்ந்து போனதால் துள்ளி எழுந்தது இளைஞர் கூட்டம்! ஆட்சியாளர்கள் ஆடிப்போயினர் சூட்சித்தடைகள் சுக்குநூறாயின! காளைகள் துள்ள சட்டம் வந்தது! நாளை நமதென நம்பிக்கை தந்தது! – உதயபாரதி
மேலும்....