வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

      படித்தல் “கற்றல் என்ற பொருளில் படித்தல் என்ற சொல் பண்டைத் தமிழ் நூல்களில் ஓரிடத்தும் காண இயலாது என்றும், பட் என்ற வடமொழி வேர்ச் சொல்லின் அடியாகப் பிறந்ததே அச்சொல் என்றும், இலக்கணச் சிந்தனை என்ற நூலின் 101ஆம் பக்கத்தில் திரு. எஸ். வையாபுரிபிள்ளை எழுதி உள்ளார். இதைத் தயை கூர்ந்து விளக்குக!’’ என்றும், திருமதி குன்றம் திரு. அ. கணபதி அவர்கள் நமக்கு எழுதுகின்றார்கள். படித்தல் என்பது கற்றல் என்ற பொருளில் […]

மேலும்....

என்றும் தேவைப்படும் பெரியார்

– கருப்பரசன்   திராவிட இயக்கம் தோன்றிய நூறாவது ஆண்டு, திராவிடக் கட்சிகளின் ஆட்சி பொன்விழாவைக் கொண்டாடும் ஆண்டும் இது. நூறாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில், வானுயர்ந்த அடையாளமாக நிற்பது பெரியாரின் நினைவு நாள். 1973இல் பெரியார் மறைந்து, 43 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தந்தை பெரியார் மறைந்தபிறகு பிறந்த ஒரு தலைமுறை, அவரைப் பார்த்தேயிராத ஒரு தலைமுறை இன்று தமிழ்நாட்டில் பெரியாரை நினைவுகூர்கிறது. ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய பலரது புகழும் நினைவும் கால வெள்ளத்தில் மங்கிவிட்டன. […]

மேலும்....

செய்யக் கூடாதவை

      சட்டம் சார்ந்தவற்றில் கூடுதலாக எதையும் நாம் சொல்லக்கூடாது வழக்குகளில் சட்டம் சார்ந்த செய்திகள் சொல்லும்போது வழக்குக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சொல்ல வேண்டும். ஆர்வத்தால் அதிகம் சொல்ல நினைத்துக் கூடுதல் விவரங்கள் அளித்தால் அதில் எதிரிக்குத் தேவையான கருத்துக்கள் கிடைத்து-விட வாய்ப்புண்டு. எனவே, நம் கட்சிக்குத் தேவையானவற்றை வலுவோடு சொல்ல வேண்டும். கூடுதல் விவரங்களைத் தவிர்க்க வேண்டும். சான்றுரைப்பவர்கள் இதில் மிகச் சரியாக நடக்க வேண்டும். இல்லையென்றால் எதிரிக்குச் சாதகமாகும். ஆனால், […]

மேலும்....

கையில் சுமக்கும் படகு!

    தேவைக்கேற்ப புதிய புதிய கருவிகளை உருவாக்கிக் கொள்கிறான் மனிதன். தொலைதூரச் சுற்றுலாப் பயணங்களில் திடீரென்று குறுக்கிடும் நதியை, ஏரியை கடக்க ஒரு படகை உருவாக்கியுள்ளான். நீரில் மிதக்கும் இந்தப் படகை, கரைக்கு வந்ததும் மூன்று நான்காகச் சுருட்டி கைப்பையில் வைத்துக்கொண்டு நீங்கள் நடந்து செல்லலாம். 2.8 மீட்டர் நீளமுள்ள இந்தப் படகு ஒரு பை போன்றது. அதைப் பிரித்து, தேவையான சட்டங்களை குறுக்காகவும் நெடுக்காகவும் பொருத்தி, காற்றடித்தால், 5 நிமிடத்தில் படகு தயாராகிவிடும். அமெரிக்காவின் […]

மேலும்....

உண்மையான பெரும் புதையல்

பிரேசில் நாட்டில் பிறந்த பவுலோகொய்லோ (Poulocoelho) எனும் ஒரு கவிஞர் எழுதிய அல்கெமிஸ்ட் (ரசவாதி) என்ற அரிய புத்தகம்தான் 20 கோடிப்பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது. அதில் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? ரசவாதி என்ற நாவலின் நாயகனாகிய சான்டியாகோ எனும் ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவன் பெரும் புதையலைத் தேடிப் புறப்பட்டுச் செல்கிறான். செல்லும் வழியெங்கும் அவனுக்கு ஏற்பட்ட நம்ப முடியாத அனுபவங்களும் தாங்க முடியாத துயரங்களுமாக அவனது பதினெட்டாண்டு காலப் பயணத்தை விவரித்துக் கதை நகர்கிறது. முடிவில் […]

மேலும்....