உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

சீனாவில் 1,854 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள யுனான் மற்றும் குய்சோகு ஆகிய இரண்டு மாகாணங்களை இணைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மலைகளுக்கும் நடுவே ஓடும் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பெய்பான்ஜியாங் பாலத்தின் உயரம் 565 மீட்டர் (1,854 அடி) ஆகும். இது உலகிலேயே மிக உயரமான பாலமாகும். இந்தப் பாலம் கட்டமைக்கப்-பட்டதையடுத்து, யுனானில் உள்ள […]

மேலும்....

கி.பி. 2030களில் தமிழன் பெயர் எப்படி இருக்கும்?

நாரண.திராவிடச்செல்வன், மலேசியா கலையரசு, முகிலன், இனியன், கலைமணி இப்படித் தேன்போல இனிக்கும் நல்ல தமிழ்ப் பெயர்களை தன் பிள்ளைகளுக்கு வைத்து அகமகிழ்ந்தார் மாரிமுத்து. நல்ல பெயர்களைக் கொண்டு வளர்ந்து ஆளான பிள்ளைகளிடம் தந்தையிடமிருந்த அந்த மொழிப்பற்று ஓரளவு இருந்தாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு ஸ்தேவா, பிரியா, பவனியா சந்தோஷன் என்றெல்லாம் பெயர் வைத்தனர். பிள்ளைகளுக்கு வாய்த்த மனைவி மார்கள் சோதிடத்திலும் எண் கணிதத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததே இதற்கான காரணமாக இருந்தது. தமிழுணர்வோடு நல்ல தமிழ்ப் பெயர்களை, பிள்ளைகளுக்கு […]

மேலும்....

உண்மையான பெரும் புதையல்

பிரேசில் நாட்டில் பிறந்த பவுலோகொய்லோ  (Poulocoelho) எனும் ஒரு கவிஞர் எழுதிய அல்கெமிஸ்ட் (ரசவாதி) என்ற அரிய புத்தகம்தான் 20 கோடிப்பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது. அதில் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? ரசவாதி என்ற நாவலின் நாயகனாகிய சான்டியாகோ எனும் ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவன் பெரும் புதையலைத் தேடிப் புறப்பட்டுச் செல்கிறான். செல்லும் வழியெங்கும் அவனுக்கு ஏற்பட்ட நம்ப முடியாத அனுபவங்களும் தாங்க முடியாத துயரங்களுமாக அவனது பதினெட்டாண்டு காலப் பயணத்தை விவரித்துக் கதை நகர்கிறது. […]

மேலும்....

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்தானாம்!

“இந்துஸ்தான் என்ற இந்த நாட்டில் வாழும் அனைவருமே ஹிந்துக்கள்தான். எப்படி பிரிட்டனில் உள்ளவர்கள் பிரிட்டிஷ்காரர்களோ, அமெரிக்காவில் உள்ளவர்கள் அமெரிக்கர்களோ அதுபோலவே இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களும்கூட ஹிந்துக்கள்தான். மத – நம்பிக்கை – அடிப்படையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்றாலும் நாட்டு அடிப்படையில் அவர்கள் ஹிந்துக்கள்தான்’’ என்று வடநாட்டில் ‘பேட்டூல்’ என்ற இடத்தில் கூறியுள்ளார் மோகன் பாகவத். கோல்வால்கர் என்ன கூறுகிறார்? இது இவராகக் கூறுவதில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை விளக்கக் கர்த்தாவாகிய ஆர்.எஸ்.எஸ். இரண்டாவது தலைவரான கோல்வால்கரின் […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

  சொந்தம் இது வடசொல் அன்று. தொன்மை, தொன்று தொட்டு, தொந்து, தொந்தம், அனைத்தும் ஒரு பொருள் உடைய சொற்கள். தொன்மை-யினின்றே மற்றவை தோன்றின! தொந்தம் என்பது சொந்தம் என்று மருவிற்று. தகரம், சகரமாதல் தமிழியற்கையே யாகும். பழமை என்பதற்குச் சொந்தம் என்ற பொருள் உண்டா எனில் ஆம், ஒருவனிடத்தில் ஒரு பொருள் பழமை தொட்டு இருந்தது எனில் அது அவனுக்கு உரியது ஆயிற்றன்றோ!ஆதலின் சொந்தம் தமிழ்ச் சொல்லே என உணர்க!(குயில்: குரல்: 2, இசை: 24, […]

மேலும்....