துப்புரவுப் பணிப் பெண்ணின் ஒப்பில்லா சாதனை!

  ரேகாவின் வெற்றியை, ‘பல்வோட்டி’ பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் ரேகா? பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 837/1200 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இது யாரும் செய்யாத சாதனையா? ஆம். இச்சாதனை, மதிப்பெண் அளவு சார்ந்தது மட்டுமல்ல, அதைப் பெற்ற அப்பெண்ணின் நிலையையே பெரிதும் சார்ந்தது. காரணம், ரேகா மாணவி அல்ல… அப்பள்ளியின் துப்புரவுப் பணியாளர்! மதுரை, நாகமலை, புதுக்கோட்டை அருகில் செயல்படும் சேவை அமைப்பான ‘பில்லர்’ மய்யத்தினரால் […]

மேலும்....

காலை உணவின் கட்டாயம்

காலையில் நாம் சாப்பிடும் முதல் உணவைத்தான் ‘ப்ரெய்ன் ஃபுட்’ என்று சொல்கிறார்கள். இரவு உணவிற்கும் மறுநாள் காலை உணவுக்குமான இடைவெளி 8 மணி முதல் 12 மணி நேரம். இந்த நேரங்களில் விரதம் போன்ற நிலையில் இருக்கிறோம். அதனால்தான் ஆங்கிலேயர்கள் ‘break fast’ என்று காலை உணவை அழைத்தார்கள். அதாவது விரதத்தை உடைப்பது. எல்லா வயதினருக்குமே காலை உணவு மிக முக்கியம். காலை உணவை சரிவர சாப்பிடாமலோ, தவிர்க்கும்போதோ ஒருவரின் இயல்புத் திறன் பாதிக்கப்படும். காலை உணவான […]

மேலும்....

இன்னும் ஒரு சேரன்மாதேவி

திருவாங்கூரைச் சேர்ந்த கொட்டாரக் கரையில் காலஞ்சென்ற ஸதாநந்த சுவாமிகள் கண்ட ஆசிரமமொன்றுள்ளது. அதில் தற்பொழுது சுவாமி ஆத்மாநந்தபாரதி அவர்கள் தலைமை வகித்து வருகிறார்கள். அன்னார் இப்பொழுது ஒரு குருகுலங் கண்டிருக்கிறார்கள். அதில் இப்பொழுது தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை. இதைப்பற்றி, சுவாமிகள் குருகுல நிதி திரட்ட நாகர்கோவில் வந்தபொழுது ஸ்ரீமான் டாக்டர் வி.ணி.நாயுடு அவர்கள் பேட்டி கண்டு பேசினார்கள். அதற்குச் சுவாமிகள் பிறப்பினாலேயே பிராமணர்கள் உயர்ந்தவர் களென்றும், ஏனையோர் ஸம்ஸ்காரத் தினாலேயே உயரவேண்டு மென்றும் கூறி சேரமாதேவிக் குருகுலம் நாசமாவதற்குக் […]

மேலும்....

பாரதியாரை நோக்கி பல கேள்விகள் கேட்டேன்!

பாரதியாரை நான் சந்தித்தால் என்ன கேட்பேன் என்று ‘குமுதம்’ ஏடு என்னைக் கேட்டது. “பாரதியார் நான் பிறப்பதற்கு முன்பே காலமான ஒரு கவிஞர், என்றாலும் இது ஒரு இனிய கற்பனைதான்.’’ இன்றைக்குப் பாரதியாரைப் பற்றி நமக்கு ஏற்பட்டிருக்கிற அய்யங்கள், அல்லது அவரது பாடல்களில் பல இடங்களில் முரணும், குழப்பமும் இருக்கிறது என்று என்னைப் போன்ற பலர் கருதுகின்ற நிலை. இவைகளையெல்லாம் தெளிவுபடுத்து வதற்கு பாரதியைப் பார்த்து பல்வேறு கேள்விகளைக் கேட்கத்தான் முயற்சிப்பேன். நான் தந்தை பெரியாரின் தொண்டன். […]

மேலும்....

அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? – 12

ஜாதி ஒழிப்பா? ஏமாற்றும் பித்தலாட்டத்தில் முக்கியமானது இந்துத்வா ஜாதி ஒழிப்பை முன்னெடுக்கிறது என்கிற பித்தலாட்டம். இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்புதான். எவ்வளவோ தத்துவங்கள் அழிந்துபோன நிலையிலும் சனாதனத் தத்துவம் (இந்து மதம்) நீடித்து இருப்பதற்குக் காரணம் அவற்றில் இல்லாத ஏதோ ஒன்று சனாதன மதத்தில் இருப்பதுதான். அந்த ஏதோ ஒன்றுதான் ஜாதிமுறை என்று சிலாகிக்கிறார் சங்கராச்சாரி. இது எதைக் காட்டுகின்றது? ஜாதி ஒழிப்பை முன்னெடுத்தது இந்துத்வா என்பதற்கு ஆதாரம் கூறுவார்களா? நாளைக்குச் சொல்லட்டுமே, ஆர்எஸ்எஸ். ஜாதியை […]

மேலும்....