பெரியாரை உலகமயமாக்கும் பெரியாரின் வாரிசு!

ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்களுடனான எனது தொடர்பும், தோழமையும் 1948 ஆம் ஆண்டு முதற்கொண்டது. கடலூர் முதுநகர் எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பிலிருந்தும் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். பொருளியல் மற்றும் வணிகவியல் பாடத்தில் கல்லூரியிலேயே முதல் மாணவனாக முதுகலைப் பட்டம் பெற்ற அவர் பல பதக்கங்களையும், பரிசுகளையும் வென்றுள்ளார். சென்னை பிராட்வே பகுதியில் இருந்த சட்டக் கல்லூரியில் அவர் பயின்றபோதும், எங்களது நட்பு நீடித்தது. மருத்துவப் பட்டப்படிப்பை […]

மேலும்....

அய்யாவே அதிசயித்த ஆளுமையின் அடையாளம்!

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து உழைத்து உயர்ந்தவர்கள் உண்டு. வறுமைச் சூழலில் பிறந்து வாழ்ந்தாலும் பெருமைக்குரியவர்களாய் முயன்று முன்னேறியவர்கள் உண்டு. பத்து வயதிலும், பள்ளிப் பருவத்திலும் பெரியவர்களுக்குரிய திறத்தோடு திகழ்ந்தவர்கள் உண்டு.படிப்பில் முதல் தகுதி, தங்கமெடல் என்று பெற்று பாராட்டுப் பெற்றவர்கள் உண்டு. சிறுவயதிலே தனது சிறப்பான பேச்சால் ஆயிரக்கணக்கானவர்களை கவர்ந்து கைத்தட்டல் பெறுபவர்கள் உண்டு. ஆயிரக்கணக்கான நூல்களைப் படித்தவர்கள்;  ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியவர்கள்; நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியவர்கள் உலகில் சிலர் உண்டு. எதிரிகள் வாயடைக்க வலிமையான வாதங்களை […]

மேலும்....

வரவேற்கிறேன்

என் உடல்நிலை எனக்குத் திருப்தி அளிக்கத்தக்கதாய் இல்லை. இப்போது போல் சுற்றுப்பயணம் செய்ய என்னால் இனி முடியாது. கழகம் நல்லபடி இயங்க வேண்டுமானால் பிரச்சாரமும் பத்திரிகையும் மிக்க அவசியமாகும். இந்த இரண்டு காரியத்திற்கும் தகுதியான தன்மையில்தான் நான் இருந்து வந்தேன். எப்படி என்றால் நான் ஒருவன்தான் இவற்றிற்கு முழுநேரத் தொண்டனாகவும் கழகத்தில் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாதவனாகவும் இருந்து வந்தேன். வருகிறேன். இன்று கழகத்தின் மூலம் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாத […]

மேலும்....